Home /News /international /

2 நாள் பயணமாக இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!!

2 நாள் பயணமாக இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

ஏற்கனவே, அவர் இந்தியா வர நீண்ட நாள்களாக திட்டமிட்டுவந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இரண்டு முறை ரத்தாகியுள்ளது. 

    ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 21ஆம் தேதி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அவர் இந்தியா வர நீண்ட நாள்களாக திட்டமிட்டுவந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இரண்டு முறை ரத்தாகியுள்ளது.

    இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் பேச்சு மேற்கொள்ள ஏப்ரல் 21ஆம் தேதி இந்தியா வருகை தரவுள்ளார். இந்தியா வருகை தரும் போரிஸ் ஜான்சன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.பின்னர் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர், வர்த்தக துறையினர் ஆகியோரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக பாதுகாப்பு, கல்வி ஆகிய துறைகளில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகள் இடையே FTA வர்த்தக ஒப்பந்தத்தின் 26 பகுதிகளில் நான்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 22 பகுதிகளில் விரைந்து செயல்படுத்தப்படும் என மூத்த அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

    Also Read : ட்விட்டருக்கு விலை பேசும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்

    போரிஸ் ஜான்சனின் இந்த பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட திடீர் போர் காரணமாக ஐரோப்பிய கண்டம் பதற்றமான சூழலில் உள்ளது.

    ரஷ்யா மீது கடும் கண்டனத்தை பிரிட்டன், உக்ரைன் நாட்டிற்கு ஆயுதம், பொருளாதார உதவியை தந்துவருகிறது. அதேவேளை, இந்தியா ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இதுவரை எடுக்கவில்லை. போர் நிகழ்வுக்கு கவலை தெரிவித்துள்ள இந்தியா இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வை எட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    தற்போதைய சூழலில் இந்தியா தனது பாதுகாப்பு தளவாடங்கள் பலவற்றுக்கு ரஷ்யாவை சார்ந்துள்ளது. அதேவேளை, கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு துறையில் உள்நாட்டிலேயே தன்னிறைவு பெறும் முயற்சியிலும் இந்தியா முக்கிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எனவே, போரிஸ் ஜான்சனின் இந்த வருகையின் போது பாதுகாப்பு சார் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்தாண்டு நவம்பர் மாதம் கிளாக்கோவின் நடைபெற்ற COP காலநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளும் இனைந்து காலநிலை பிரச்னையை எதிர்கொள்ளவும், மாற்று எரிசக்தி திட்டங்களை செயல்படுத்தவும் பரஸ்பர உறுதியளித்தனர்.

    - கண்ணன் வரதராஜன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Boris johnson

    அடுத்த செய்தி