இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் முயற்சியாக, இந்திய சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு மலிவான மற்றும் எளிதான விசாக்களை வழங்குவதன் மூலம் குடியேற்ற விதிகளை தளர்த்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து லண்டன் நாளிதழ்களில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, இங்கிலாந்து சா்வதேச வா்த்தகத் துறை அமைச்சா் ஆன் மேரி ட்ரிவெலியான் இந்த மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது, இந்தியா- இங்கிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து அதிகாரபூா்வ பேச்சுவாா்த்தை தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அந்த சமயத்தில், இந்தியாவின் நீண்ட நாள் கோரிக்கையான விசா கட்டுப்பாடுகள் தளா்த்துவது குறித்த அறிவிப்புகளை ஆன் மேரி வெளியிடுவாா் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also read: உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!
இந்தியா, இங்கிலாந்து இடையே ஆண்டுக்கு 3,000 மாணவா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பணி அனுபவம் வழங்குவதற்கான வாய்ப்புகளை அளிக்க வகை செய்யும் ஒப்பந்தம் கடந்த மே மாதம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தை 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் அமல்படுத்துவதற்கு வெளியுறவு அமைச்சகமும் லண்டனில் உள்ள இந்திய தூதரகமும் பணியாற்றி வருகின்றன.
இதற்கிடையே, இந்திய இளைஞா்கள் இங்கிலாந்துக்கு வந்து 3 ஆண்டுகள் தங்கி பணிபுரிவதற்கு விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதவிர, கல்வி கற்க வரும் மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள், பணிபுரிய வருவோா் ஆகியோருக்கான விசா கட்டணத்தை வெகுவாகக் குறைக்கவும் இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனா போன்ற நாடுகளுக்கான விசாக் கட்டணத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இவை கடுமையாக முரண்படுகின்றன.
இதையும் படிங்க: கொரோனா தடுப்பூசியின் 4-வது டோஸை செலுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு இஸ்ரேல் அனுமதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: London