Home /News /international /

கொரோனாவுடன் அதிக நாள் போராட்டம் நடத்திய நபர் இவர் தான் - ஆய்வில் தகவல்

கொரோனாவுடன் அதிக நாள் போராட்டம் நடத்திய நபர் இவர் தான் - ஆய்வில் தகவல்

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அதிகபட்சமாக 505 நாள்கள் கோவிட் பாதிப்பை எதிர்த்து போராடி உயிரிழந்துள்ளார் என ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அதிகபட்சமாக 505 நாள்கள் கோவிட் பாதிப்பை எதிர்த்து போராடி உயிரிழந்துள்ளார் என ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அதிகபட்சமாக 505 நாள்கள் கோவிட் பாதிப்பை எதிர்த்து போராடி உயிரிழந்துள்ளார் என ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

    பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கோவிட் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் கோவிட் பாதிப்பால் போராடிவந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நபரின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்துள்ளதே இதற்கு காரணம் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


    இது தொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த பெருந்தொற்று நிபுணர் மருத்துவர் லூக் பல்க்டான் ஸ்னெல் கூறுகையில், இதுவரை யாருக்கு அதிக காலம் கோவிட் பாதிப்பு இருந்துள்ளது என உறுதியாக கூறிவிட முடியாது. காரணம் அனைவரும் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வார்களா என்பதை உறுதி செய்ய முடியாது. அதேவேளை, இதுவரை பதிவான பாதிப்புகளில் பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் 505 நாள்கள் கோவிட் பாதிப்பை எதிர்கொண்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார் என்றார்.இவர் தலைமையிலான குழு நீண்ட கால கோவிட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்துவருகிறது.


    கோவிட் பாதித்த அந்த நபரின் அடையாளத்தை மருத்துவர்கள் வெளிப்படையாக கூறவில்லை. இந்த நபருக்கு ஆல்பா, காமா, ஒமிக்ரான் என 10 விதமான உருமாறிய தொற்றும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் தொற்று பாதிப்புடன் நீண்ட போராட்டத்தில் இருந்த இந்நபர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.




    பிரிட்டனைச் சேர்ந்த கிங் கல்லூரி மிக மோசமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கோவிட் பாதிப்பு நோயாளிகள் 9 பேரை ஆய்வு செய்து வருகிறது. இதில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், இருவர்  ஆன்டிபாடி  தெரப்பி  மற்றும்  ஆன்டி  வைரல் மருந்துகள் மூலம் மீண்டுள்ளனர். இருவர் எந்த சிகிச்சையும் தேவைப்படாமலேயே மீண்டுள்ளனர்.


    ஒருவர் 412 நாள்களாக நோய் பாதிப்புடன் தொடர்ந்து போராடிவருகிறார்.கோவிட் பாதிப்பு ஏற்பட்டு 12 வாரங்களுக்கும் மேலாக மீள முடியாதவர்களை நீண்ட கோவிட்(Long Covid) பாதிப்பு கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் மிகவும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள்.எனவே, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை கண்டறிந்து அவர்களை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பெருந்தொற்றிலிருந்து காக்க வேண்டும் என மருத்து நிபுணர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Covid-19

    அடுத்த செய்தி