பிரச்னைகளை தனிப்பட்ட முறையில் பேசித் தீர்ப்போம் - ஹாரி, மேகனுக்கு அழைப்புவிடுத்த பிரிட்டன் ராணி

பிரச்னைகளை  தனிப்பட்ட முறையில் பேசித் தீர்ப்போம் - ஹாரி, மேகனுக்கு அழைப்புவிடுத்த பிரிட்டன் ராணி

மேகன் மார்கெல், ஹாரி

பிரச்னைகளைத் பேசித் தீர்த்துக்கொள்வோம என்று ஹாரி, மேகனுக்கு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடிதம் எழுதியுள்ளார்.

  • Share this:
இங்கிலாந்து அரச குடும்ப பொறுப்புகளிலிலிருந்து விலகிய இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கெல் ஆகியோர் பிரபல தொலைக்காட்சி நெறியாளர் ஆர்ப் வின்ஃபிரேவுக்கு பேட்டியுள்ளனர். அந்தப் பேட்டியில் அரச குடும்பத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிக்களைப் பகிர்ந்துள்ளது. அவர்களுடைய பேட்டி உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய மேகன் மார்கெல், ‘ஹாரியின் சகோதரரின் மனைவி கேட் 2018-ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கு கொஞ்ச நேரம் முன்பு என்னை அழவைத்தார். அதுதான் திருப்புமுனை. கேட்டை நான் அழவைத்தேனா என்று கேட்கிறீர்கள். அவர்தான் என்னை அழவைத்தார். திருமணத்துக்கு சில தினங்களுக்கு முன்னர் கேட் மனஅமைதியின்றி இருந்தார். அது மோதல் இல்லை. என்னுடைய திருமணத்தின்போது நான் அனுபவமின்றி இருந்தேன்.

நான் எப்போது அரச குடும்பத்துடன் இணையப் போகிறேன் என்பது தெரியாமல் இருந்தேன். நான் அனுபவமின்றிதான் திருமணத்துக்கு சென்றேன் என்று கூறுவேன். ஏனென்றால், பிரிட்டன் அரச குடும்பத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. அதிகாரப்பூர்வமாக திருமணம் நடைபெறுவதற்கு மூன்று தினத்துக்கு முன்னரே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். யாருக்கும் தெரியாது. அரச குடும்பத்தினர் என்னுடைய குழந்தையின் நிறம் குறித்து கவலை கொண்டனர் என்று என் கணவர் ஹாரி தெரிவித்தார்.

எங்களுடைய மகனுக்கு பட்டம் வழங்கப்படவில்லை. அதனால், பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. நான் உயிர்வாழவேண்டாம் என்று நினைத்தேன்’ என்று அரச குடும்பம் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்தநிலையில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த சில ஆண்டுகளாக ஹாரியும், மேகன் மார்கெலும் சந்தித்த சவால்கள் குறித்து தெரியவந்தது ஒட்டுமொத்த குடும்பமும் மிகுந்த கவலையடைந்தோம். அவர்களுடைய பிரச்னைகள் தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரச்னைகள் குறித்து தனிப்பட்ட முறையில் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: