• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி எம்.பியை தேவாலயத்தில் படுகொலை செய்த தீவிரவாதி!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சி எம்.பியை தேவாலயத்தில் படுகொலை செய்த தீவிரவாதி!

Britain MP David

Britain MP David

எஸ்செக்ஸ் மாகாணத்தில் தேர்ந்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவர் கொலை செய்யப்படுவது இது 2வது முறை நடைபெறும் சம்பவமாகும்.

  • Share this:
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி ஒருவர் தேவாலயத்திற்குள் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இது தீவிரவாத செயல் என பிரிட்டன் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

பிரிட்டனின் எஸ்செக்ஸ் மாகாணத்தில் உள்ள சவுதெண்ட் வெஸ்ட் தொகுதி எம்.பியாக இருப்பவர் 69 வயதாகும் டேவிட் அமெஸ், இவர் பிரதமர் போரிஸ் ஜான்சன் அங்கம் வகிக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய தலைவர் ஆவார்.

கடந்த வெள்ளியன்று லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள பெல்ஃபெர்ஸ் மெதொடிஸ்ட் தேவாலயத்தில், நடைபெற்ற கூட்டம் ஒன்றில் எம்.பி டேவிட் கலந்து கொண்டு மக்களிடையே பேசினார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து எம்.பி டேவிட்டை சராமரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த டேவிட் சரிந்து விழுந்தார். இந்த திடீர் கொலைவெறி தாக்குதலை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதனிடையே, உடனடியாக தகவல் கிடைத்து மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து காயமடைந்த டேவிட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே சம்பவத்தில் தொடர்புடைய அந்த 25 வயது வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான நபர் தீவிரவாதியாக இருக்கக்கூடும் எனவும், துப்பறியும் நிபுணர்களும், தீவிரவாத தடுப்பு பிரிவினரும் அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் இங்கிலாந்தில் வசித்து வரும் சோமாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read: நவ்ஜோத் சிங் சித்துவின் திடீர் யூ-டர்ன்.. ராஜினாமா முடிவை கைவிடுகிறார்!

எஸ்செக்ஸ் மாகாணத்தில் தேர்ந்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவர் கொலை செய்யப்படுவது இது 2வது முறை நடைபெறும் சம்பவமாகும்.

எம்.பி டேவிட் கொலை சம்பவத்துக்கு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களின் அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் நீண்ட காலம் மக்கள் பிரதிநிதியாக அவர் திகழ்ந்து வருகிறார். டேவிட் மறைவையடுத்து இங்கிலாந்து நாட்டின் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட எம்.பி டேவிட்டிற்கு திருமணமாகி 5 பிள்ளைகள் உள்ளனர். இவர் 1983 பசில்டன் தொகுதி எம்.பியாக முதல் முறை தேர்வானார். சிறந்த மக்கள் சேவைக்காக இங்கிலாந்து ராணி எலிசபெத்தால் பாராட்டு பெற்றவர் டேவிட்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: