இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனா விதிமுறைகளை மீறியதாக சர்ச்சை எழுந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் சுகாதார நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தனது உதவியாளரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மாட் ஹான். சமூக இடைவெளி விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில் இவர் தனது உதவியாளரான ஜீனா கோலண்டேஞ்சலோவுக்கு முத்தம் கொடுத்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் அந்நாட்டில் வெளியாகும் பிரபல நாளிதழில் வெளியானது. இருவரும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்துள்ள நிலையில் தவறான தொடர்பில் இவர்கள் இருப்பதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டது. இது இங்கிலாந்தில் பெரும் சர்ச்சையானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். மாட் ஹான்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக போரிஸ் ஜான்சன் அறிக்கை வெளியிட்டார். ஆனால் இந்த
விவகாரத்தை எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை. மாட் ஹாக் உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. தனது சொந்த கட்சியிலும் மாட் ஹான்க்-க்கு எதிராக குரல்கள் வலுத்தன.
இதன்காரணமாக நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதுதொடர்பான கடிதத்தை பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வழங்கினார். மாட் ஹான்க் உதவியாளரான ஜீனா கோலண்டேஞ்சலோவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். மாட் ஹான்க் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட போரிஸ் ஜான்சன் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக ஷாஜித் ஜாவித் என்பவரை நியமித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.