உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி!

பிரிட்டிஷ் ஹெரால்ட் இதழ் வெளியிட்ட இந்த பட்டியலில் டொனால்ட் டிரம்ப் 21.9 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

Web Desk | news18
Updated: June 22, 2019, 8:58 AM IST
உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி!
பிரிட்டிஷ் ஹெரால்ட் இதழின் அட்டைப்படத்தில் மோடி
Web Desk | news18
Updated: June 22, 2019, 8:58 AM IST
உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பின்னுக்கு தள்ளி இந்திய பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார்.

லண்டனிலிருந்து வெளியாகி கொண்டிருக்கும் பிரபல இதழான பிரிட்டிஷ் ஹெரால்ட், உலகின் சக்தி வாய்ந்த தலைவர் யார்? என, தமது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. அதில் மொபைல்ஃபோன் மூலம் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தலைவர்களின் பெயர்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தன.

இவர்களில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.


இவர்களில் இந்த ஆண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள் மற்றும் அரசியல்வாதியாக, 31 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விளாடிமிர் புடின் 29 சதவீதத்துடன் 2-ம் இடத்தையும், டிரம்ப் 21.9 சதவீதத்துடன் 3-வது இடத்தையும், சீன அதிபர் 18.1 சதவீதத்துடன் 4-வது இடத்தையும் பிடித்தனர்.

Also see... மாற்று சக்தியா கமல்?

Loading...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...