ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான தீர்மானம், 3-வது முறையாக தோல்வியடைந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்பட உள்ள ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறும் வகையிலான தீர்மானம் மீது, நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்துக்கு 286 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். 344 உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், இந்த ஒப்பந்தத்துக்கான தீர்மானம் 3-வது முறையாக தோல்வியடைந்தது.
மே 22-ம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற இருந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஏப்ரல் 12-ம் தேதிக்குள் பிரிட்டன் தெரிவிக்க வேண்டும். இதில், வெளியேறுவதற்கான உடன்பாட்டை ரத்துசெய்வது, ஒப்பந்தத்தை இறுதி செய்ய நீண்டகாலம் அவகாசம் பெறுவது அல்லது ஒப்பந்தம் எதுவும் இல்லாமலேயே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது ஆகிய மூன்று வாய்ப்புகள் உள்ளன.
எனினும், புதிய திட்டத்தை வகுப்பதற்காக வரும் திங்கட்கிழமை மீண்டும் வாக்கெடுப்பு நடத்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தால் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக தெரசா மே ஏற்கனவே அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்னதாக பேசிய தெரசா மே, நாட்டின் நலனை கருத்தில் கொள்ளுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, பிரிட்டனிலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக, நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சண்டர்லேண்ட் என்ற இடத்திலிருந்து பொதுமக்கள் பேரணி நடத்தினர். இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, தேம்ஸ் நதி வழியாக பேரணி சென்றனர்.
Also see... திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் அதிரடி சோதனை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BREXIT, Theresa May