முகப்பு /செய்தி /உலகம் / என்னை ஒழித்துக்கட்ட ஒரே ஒரு ஏவுகணை போதும் என புதின் மிரட்டனார்.. போரிஸ் ஜான்சன் பகீர் குற்றச்சாட்டு!

என்னை ஒழித்துக்கட்ட ஒரே ஒரு ஏவுகணை போதும் என புதின் மிரட்டனார்.. போரிஸ் ஜான்சன் பகீர் குற்றச்சாட்டு!

போரிஸ் ஜான்சன், விளாதிமிர் புதின்

போரிஸ் ஜான்சன், விளாதிமிர் புதின்

உக்ரைன் போருக்கு முன்பு, தன்னை தொடர்பு கொண்ட புதின், கொலை மிரட்டல் விடுத்ததாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaUKUK

தன்னை ஒழித்துக்கட்ட ஒரே ஒரு ஏவுகணை போதும் என்று ரஷ்ய அதிபர் புதின் மிரட்டியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தன்னை ஏவுகணை மூலம் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்தார் என பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஷ்யா போர் நடவடிக்கையில் ஈடுபட்ட போது பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவாக இருந்து வந்தார். இந்த நிலையில், போருக்கு முந்தைய ஆண்டுகளில் ரஷ்ய அதிபர் புதினுடன் மேற்கு நாடுகள் எவ்வாறு போராடியது என்பதை குறிக்கும் வகையில், பிபிசி செய்தி நிறுவனம் புதிய தொடருக்காக போரிஸ் ஜான்சனிடம் பேசியுள்ளது.

அப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் போருக்கு முன்பு, தன்னை தொடர்பு கொண்ட புதின், கொலை மிரட்டல் விடுத்ததாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில், தன்னை காயப்படுத்த விரும்பவில்லை என்றும் தன்னை ஒழிக்க ஒரே ஒரு ஏவுகணை போதும் என்ற தொனியில் மிரட்டியதாகவும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

First published:

Tags: Boris johnson, Russia, Vladimir Putin