ஹோம் /நியூஸ் /உலகம் /

BREXIT | 47 ஆண்டுகால உறவு முறிந்தது...! பிரிட்டன் மக்கள் கொண்டாட்டம்

BREXIT | 47 ஆண்டுகால உறவு முறிந்தது...! பிரிட்டன் மக்கள் கொண்டாட்டம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் நேற்று நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக விலகியது. 

  நீண்ட இழுபறிக்கு பின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக விலகியது. அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

  அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியதற்கு பிரிட்டனின் அங்கமாக உள்ள ஸ்காட்லாந்து அதிருப்தி தெரிவித்துள்ளது.

  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியதை வரவேற்று இங்கிலாந்தில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் திரண்ட நூற்றுக்கணக்கானோர் தேசிய கொடியை ஏந்தியும், சுதந்திரம் கிடைத்துவிட்டதாக முழக்கங்களை எழுப்பியும் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.

  அரசு அலுவலகங்கள் அனைத்தும் அந்நாட்டு தேசிய கொடி வண்ணத்தில் மின்விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டிருந்தன.

  Published by:Sankar
  First published:

  Tags: BREXIT