திருமணங்களில் குழப்பம், தாமதம், பொருட்கள் காணாமல் போவது, சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் இயல்பாக நடக்கூடியவை தான். ஆனால், மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றே அனைவரும் விரும்புவார்கள். ஆனால், ஒரு சில திருமணங்களில், குறிப்பாக, திருமணம் நிகழும் இடம் பெரிதாக இருக்கும் போது, உங்கள் கட்டுப்பாட்டை மீறி சில விஷயங்கள் நடக்கலாம். எதிர்பாராத விதமாக, இங்கிலாந்து நாட்டு மணப்பெண்ணுக்கு அவரின் திருமணத்தில் ஏற்பட்ட ஒரு மோசமான பாதிப்பைத் தொடர்ந்து £1,50,000 (சுமார் ஒன்றரை கோடி ரூபாய்) நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
2018ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. மெட்ரோ UK வெளியிட்டுள்ள தகவலின்படி, காரா டோனவன் என்ற பெண், (மணப்பெண்) அதிநவீன ‘மினுமினுக்கும் நடன தளத்தில்’ கால் நழுவி விழுந்து, முட்டி உடைந்துவிட்டதால், அந்த அரங்கின் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
எல்ஈடி விளக்கு பிரகாசத்தில் ஒளிரும், லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் தளத்தை நிறுவனம் பரிந்துரைத்ததற்கு எதிராக, டோனவன் புகார் எழுப்பியுள்ளார். நிறுவனத்தின் ஊழியரான லீஸ்பிரையாரி தளத்தில் யாரும் மது அருந்தக்கூடாது என்பதை கூறவில்லை மற்றும் தடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
Also Read: தலைதூக்கும் மின்வெட்டு ஆபத்து.. தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. சமாளிக்குமா அரசு?
மேசைகள் தரையின் விளிம்பில் வைக்கப்பட்டிருந்தது என்றும், அது மேடையில் குடிக்கவும், நடனமாடவும் மக்களை ஊக்குவித்தது என்றும் தெரிவித்தார் டோனவன். அந்த நடன மேடை 'மிகவும் வழுக்ககூடிய' மேற்பரப்பு கொண்டது, அதனால் விருந்தினர்கள் தவறுதலாக மதுபானத்தைச் சிந்தியபோது, நிறுவனத்தின் ஊழியர்கள் அதைத் துடைக்கத் தவறிவிட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
மதுபானம் சிந்தியது பற்றி அறியாமல் இருந்த மணப்பெண், அந்த பளபளப்பான, வழுக்கும் மேடையில் விழுந்ததால், கை உடைந்து விட்டது. இந்த சம்பவம் செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு நடந்தது. அவர் விழுந்ததிலிருந்து இது வரை மூன்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. இருப்பினும் டோனோவன் நிரந்தர வலியால் அவதிப்படுகிறார். எனவே, அவரால் சிறப்புத்-தேவை ஆசிரியராக தன்னுடைய பணிக்குத் திரும்ப முடியவில்லை.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான டோனவன், 16 ஆம் நூற்றாண்டின் டியூடர் மேனர் ஹவுஸை நடத்தி வரும் கன்ட்ரி ஹவுஸ் வெட்டிங்ஸ் லிமிடெட் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த இடம், பத்திரிகை வாசகர்களால், UK வின் மிகக்சிறந்த திருமண இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டோனவனின் வழக்கறிஞர் பிலிப் கோடார்ட், இந்த வழக்கைப் பற்றி கூறுகையில், மாலை வேளையில், விருந்தினர்கள் நடனமாடுவார்கள், மது அருந்தும் கோப்பைகளை வைத்துக் கொண்டு நடனமாடும்போது, அது சிந்தியதாகவும், அது துடைக்கப்படாததால் டோனவன் கை முறிந்தாதகவும் கூறினார்.
டோனவனின் காயத்தைப் பற்றிப் பேசுகையில், டோனவனின் எழுதுதல், வாகனம் ஓட்டுதல் அல்லது இரண்டு கைகளால் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான திறனை அது தடுத்துவிட்டது என்று கூறினார்.டோனவனின் கூற்றுகள் இன்னும் நீதிபதியால் விசாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending