கலைக்கும் கற்பனைக்கும் எல்லையே கிடையாது. எவ்வளவு கற்பனை செய்கிறோமோ அது எல்லாமே கலையாக மாறிவிடும். அப்படி இந்த உலகத்தில் நினைத்து கூட பார்க்க முடியாத பல கலை பொருட்களை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் இங்கிலாந்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தனது சொந்த சிறுநீரகக் கல்லில் மினியேச்சர் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். உடல்நலம் மற்றும் இயலாமை உள்ளிட்ட காரணங்களால் கவனிக்கப்படாத கலைஞர்களின் பணியை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட இங்கிலாந்தின் அவுட்சைட் இன் ஆறாவது தேசிய திறந்தவெளி கண்காட்சியில் 80 க்கும் மேற்பட்ட கலைஞர்களின் படைப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் சைமன் லு போகிட் என்பவர் ஒரு அறிய கலை பொருளை காட்சிப்படுத்தினார். அறக்கட்டளையின் கூற்றுப்படி , போகிட் இரண்டு வருட அல்ட்ராசவுண்ட் ஷாக் வேவ் லித்தோட்ரிப்சி அமர்வுகளின் போது எடுக்கப்பட்ட தனது சொந்த சிறுநீரக கற்களிலிருந்து ஒரு நுண்ணிய சிற்பத்தை உருவாக்கும் யோசனையை அறக்கட்டளையிடம் வெளிப்படுத்தியுள்ளார். அது தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. போகிட் பல வருடங்களாக சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை பெற்று தனது உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட கற்களை வைத்து ஒரு கலை பொருளை செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். அந்த பொருளை தேசிய சுகாதார சேவையின் (NHS) அக்கறையுள்ள ஊழியர்களால் காட்டப்படும் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் மனிதாபிமான செயல்களுக்கான நினைவுச் சின்னமாக அடையாள படுத்தவும் எண்ணியுள்ளார்.
அதன் அடிப்படையில் தனது சிறுநீரக கற்களை வைத்து இங்கிலாந்தின் சிறந்த நினைவுச்சின்னமான ஸ்டோன்ஹெஞ்ச் சின்னத்தின் ஒரு சிறிய பகுதியை உருவாக்கினார். கிட்னி ஸ்டோன்ஹெஞ்ச் என்று பெயரிட்டு இதை "மனிதநேயம்" என்ற தலைப்பில் ஒரு சுற்றுலா கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர். கண்காட்சி ஜனவரி 27 ஆம் தேதி வரை லண்டன் சோதேபியில் நடைபெறும் என்று அறக்கட்டளை சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kidney Stone, UK