Home /News /international /

சர்வதேச விமான பயணங்களில் அடுத்த சில மாதங்களுக்கு தாமதம் நீடிக்கும் - பிரிட்டன் தகவல்.!

சர்வதேச விமான பயணங்களில் அடுத்த சில மாதங்களுக்கு தாமதம் நீடிக்கும் - பிரிட்டன் தகவல்.!

International Flight

International Flight

UK Airport | மான்செஸ்டர் விமான நிலையத்தின் மேலாண் இயக்குநர் இந்த வாரத்தில் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இது மட்டுமின்றி, பயணிகளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் அளவுக்கு, தங்களிடம் போதுமான பணியாளர்கள் இல்லை என்பதை மான்செஸ்டர் விமான நிலைய குழுமத்தின் முதன்மை இயக்குநர் கார்லே கோர்னிஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக எண்ணற்ற விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட வரிசைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், விமானப் போக்குவரத்து சேவை துறையை முறைப்படுத்துமாறு பிரிட்டனில் உள்ள அனைத்து விமானச் சேவை நிறுவனங்களுக்கு அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.

இத்தகைய நிலையில், சர்வதேசப் பயணிகள் விமானப் பயணங்களை மேற்கொள்ளும்போது 90 நிமிடங்கள் வரை காத்திருக்க நேரிடும் என்றும், அடுத்த சில மாதங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

பணியாளர்களின் விடுப்பு காரணமாக பாதிப்பு :

பிரிட்டன் விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் பலர் கொரோனா சார்ந்த காரணங்களால் விடுப்பு எடுத்துள்ளனர். இதனால், விமான நிலையங்களின் செக்-இன் பகுதி, செக்யூரிட்டி மற்றும் பேக்கேஜ் பாயிண்ட் ஆகிய இடங்களில் தாமதம் நிலவுகிறது.

இத்தகைய சூழலில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஈஸிஜெட் போன்ற நிறுவனங்கள், தங்களுடைய விமானச் சேவைகள் பலவற்றை ரத்து செய்துள்ளன. இதனால், ஈஸ்டர் பண்டிகையை ஒட்டிய விடுமுறை பயணங்களுக்கு திட்டமிட்டிருந்த பயணிகள், விமானங்கள் கிடைக்காமல் தாமதங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.



பிரிட்டனில் மிகப் பெரியதாக உள்ள மான்செஸ்டர், ஹீத்ரு மற்றும் பிர்மிங்ஹாம் போன்ற விமான நிலையங்களில் இதே பிரச்சினை நீடிக்கிறது. கொரோனா பிரச்சனை உச்ச கட்டத்தில் இருந்தபோது பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்குப் பதிலாக புதிய பணியாளர்களை நியமிப்பதில் தாமதம் மற்றும் தற்போதைய பணியாளர்களின் கொரோனா சார்ந்த விடுப்புகள் போன்ற காரணங்களால் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

Also Read : ட்விட்டருக்கு விலை பேசும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர்

மான்செஸ்டர் விமான நிலையத்தின் மேலாண் இயக்குநர் இந்த வாரத்தில் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இது மட்டுமின்றி, பயணிகளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் அளவுக்கு, தங்களிடம் போதுமான பணியாளர்கள் இல்லை என்பதை மான்செஸ்டர் விமான நிலைய குழுமத்தின் முதன்மை இயக்குநர் கார்லே கோர்னிஷ் ஒப்புக் கொண்டுள்ளார்.

Also Read : Digital Nomad Visa வழங்க திட்டமிடும் இத்தாலி

இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த குளிர்கால இறுதியில் இருந்தே நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், விமான நிலையத்திற்கான பணியாளர்களை பணியமர்த்த முடியாத அளவுக்கு சிக்கல் நீடிக்கிறது. முழுமையான பணியாளர் குழுவுக்கு தேவையான பணியாளர்களை எங்களால் பணி நியமனம் செய்ய இயலவில்லை’’ என்று கூறினார். மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகள், சுமார் 3 மணி நேரம் முன்பாகவே வந்துவிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.



தொழிலை சீரமைக்க அறிவுறுத்தல்:

விமானப் பயணங்களின் தாமதம் மற்றும் விமானம் ரத்து போன்ற காரணங்களால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர் என்பதோடு மட்டுமல்லாமல், நாடெங்கிலும் விமானப் போக்குவரத்து சேவை சீரடையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது என்று பிரிட்டன் விமானப் போக்குவரத்து ஆணையரகத்தின் முதன்மை இயக்குநர் ரிச்சர்ட் மொரியாடி கூறியுள்ளார்.

Also Read : அம்மா சொர்க்கத்தில் சந்திக்கிறேன்.. போரில் உயிரிழந்த தாய்க்கு உக்ரைன் சிறுமி உருக்கமான கடிதம்

மீண்டும் கொரோனா பரவல்:

அதிவேகமாகப் பரவக் கூடிய, கொரோனா வைரஸின் புதிய வடிவமான பிஏ.2 வைரஸ் பாதிப்பு பிரிட்டனில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் சராசரியாக 13 பேரில் ஒருவருக்கு இந்த நோய்த்தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஈஸ்டர் கொண்டாடுவதற்காக பல்வேறு குடும்பத்தினர் தற்போது விமானப் பயணங்களுக்கு பதிவு செய்திருந்தனர். ஆனால், கொரோனா சார்ந்த கட்டுப்பாடுகளால், அவை தற்போது தடைபட்டுள்ளன.
Published by:Selvi M
First published:

Tags: Britain, Covid-19, Flight

அடுத்த செய்தி