ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் புகிசா என்ற கிராமத்தில் ஒரு குடும்பம் வாழ்கிறது. அதன் உறுப்பினர்கள் எத்தனை பேர் எனக் கேட்டால் தலை சுற்றிவிடும். ஒரு கணவர், 12 மனைவிகள், 102 குழந்தைகள் மற்றும் 586 பேரக் குழந்தைகள். ஒரு பெரிய காம்பவுண்டிற்குள் சிறிய காலனியைப் போல வாழ்கிறது இந்த குடும்பம். அந்த சாதனைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா மூசா ஹசஹ்யயா.
இவருக்கு வயது அப்படி ஒன்றும் அதிகமில்லை. 67 தான் ஆகிறது. மனிதன் 67 வயது வரை தனது மனைவிகளை குழந்தை பெற வைத்திருக்கிறார். ஆனால் இப்போது தனது 12 மனைவிகளிடமும் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் மூசா. என்ன தெரியுமா? தயவு செய்து குழந்தை பெற்றக்கொள்ளாதீர்கள் என்பதுதான் அது.
தலைவருக்கு ஆர்வம் குறைந்து வி்ட்டதோ? அதனால் தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்கிறாரோ என்று தவறாக நினைத்து விடாதீர்கள். மனைவிகளிடம் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் என்றுதான் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதற்கு அவர் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? போதுமான வருமானம் இல்லாமல் தான் பெற்ற பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லையாம். இவருக்கு இன்னொரு சிக்கலும் இருக்கிறதாம். தனது 102 பிள்ளைகளையும் பெயரை நினைவுபடுத்தி அழைக்க முடியவில்லையாம்.
அவர் வாழும் கிராமத்தின் தலைவராக இருக்கும் மூசா, தன்னிடம் இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தை வாழ வைத்திருக்கிறார். ஆனால், இப்போது அதில் இருந்து வரும் வருமானம் போதவில்லையாம். அதனால் உகாண்டா அரசிடம் உதவி கேட்டிருக்கிறார்.
1971 ஆம் ஆண்டு தனது பதினாறாவது வயதில் படிப்பை நிறுத்திவிட்டு முதல் திருமணம் செய்திருக்கிறார் மூசா.. இன்னும் நின்றபாடில்லை.. 67 வயதில் தன்னைப் போல திருமணம் செய்துகொள்பவர்களிடம், “அதிகம் ஆசை உள்ளவர்கள் அதிகபட்சம் நான்கு மனைவிகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள்” என அட்வைஸையும் அள்ளி வீசியுள்ளார்.
செய்தியாளர் : ரோசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending News, Viral News