ஹோம் /நியூஸ் /உலகம் /

தீவிரமாக பரவும் எபோலா வைரஸ் தொற்று.. இரு நகரங்களில் லாக்டவுன்!

தீவிரமாக பரவும் எபோலா வைரஸ் தொற்று.. இரு நகரங்களில் லாக்டவுன்!

உகாண்டாவில் எபோலா தொற்று பரவல்

உகாண்டாவில் எபோலா தொற்று பரவல்

ஆப்ரிக்க நாடுகளில் 2013-2017 காலகட்டத்தில் எபோலா தீவிரமாக பரவி 11,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Inter, IndiaKampalaKampala

  கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு இரு முக்கிய நகரங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் யோவெரி முசிவேனி முபேந்தே மற்றும் கசன்டா ஆகிய நகரங்களில் மூன்று வாரம் லாக்டவுன் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

  இதையடுத்து இந்த நகரங்களில் வழிபாட்டுத் தலங்கள், கேளிக்கை பகுதிகள், பார்கள், இரவு விடுதிகள் அனைத்தும் மூடப்படுகின்றன.இதுவரை எபோலோ நோய் தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.கடந்த செப்டம்பர் மாதத்தில் உகாண்டாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு உஷார் நிலை அறிவிக்கப்பட்டு எபோலா நோய்த் தொற்று குறித்து தேவையான விழிப்புணர்வுகளை அந்த பகுதி மக்களுக்கு அரசு ஏற்படுத்த தொடங்கியது.

  கோவிட்-19 பரவல் போல எபோலாவுக்கு லாக்டவுன் தேவைப்படாது என அதிபர் முசிவேனி சில நாள்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் தொற்று தற்போது தீவிரத்துடன் பரவுவதால் வேறு வழியின்றி இரு முக்கிய நகரங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.மற்றொரு அண்டை நாடான காங்கோவிலும் எபோலா பரவலுக்கான அறிகுறிகள் பதிவாகியுள்ளன.

  இதையும் படிங்க: சுரங்கத்தில் கிடைத்த 140 ஆண்டுகள் பழமையான ஜீன்ஸ் பேன்ட்.. ரூ.72 லட்சத்திற்கு ஏலம் போனது!

  ஆப்ரிக்க நாடுகளில் 2013-2017 காலகட்டத்தில் எபோலா தீவிரமாக பரவி 11,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன. பின்னர் தடுப்பூசி மூலம் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இதை கருத்தில் கொண்டு தற்போது ஆப்ரிக்கா நாடுகள் எபோலா பரவலை முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு கட்டுப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. விமான பயணம் மூலம் நோய் பரவும் என்பதால் ஆப்ரிக்கா மட்டுமல்லாது மற்ற உலக நாடுகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Ebola virus, Uganda