டிரைவர்களுக்கு தனி பாத்ரூம்... மன்னிப்புக் கேட்ட உபெர் நிறுவனம்!

ஒரு வகுப்பு வாரியான பிரிவினை, ஒடுக்குமுறை என சமூக வலைதளங்களில் உபெர் நிறுவனத்துக்கு எதிராக விமர்சனங்கள் குவியத் தொடங்கின.

டிரைவர்களுக்கு தனி பாத்ரூம்... மன்னிப்புக் கேட்ட உபெர் நிறுவனம்!
உபெர்
  • News18
  • Last Updated: December 6, 2019, 9:33 PM IST
  • Share this:
உபெர் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு தனி கழிப்பறை மற்றும் அங்கு வரும் வாகன ஓட்டுநர்களுக்குத் தனி கழிப்பறை வைக்கப்பட்டிருந்ததற்கு அந்நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

வாடகை கார் சேவை நிறுவனமான உபெரின் அமெரிக்க அலுவலத்தில் ஊழியர்களுக்கும் வாகன ஓட்டுநர்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள் வைக்கப்பட்டிருந்துள்ளது. வாகன ஓட்டுநரான எரிக்கா என்ற பெண் இதுதொடர்பான புகைப்படங்களை விளக்கத்துடன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

’ஆண், பெண் கழிவறைகள் தனித்தனியாக வைக்கப்பட்டிருக்கும். ஆனால், சமூகத்தில் இரண்டு வகுப்புகளாக ஊழியர்களைப் பிரித்து தனித்தனி கழிவறைகள் தரப்பட்டிருப்பது நியாயமா?’ என அப்பெண் வாகன ஓட்டுநர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது ஒரு வகுப்பு வாரியான பிரிவினை, ஒடுக்குமுறை என சமூக வலைதளங்களில் உபெர் நிறுவனத்துக்கு எதிராக விமர்சனங்கள் குவியத் தொடங்கின. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா அகேசியோ கூட உபெருக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.இதனால் பகிரங்க மன்னிப்பு கோரிய உபெர் நிறுவனம், “இதுபோன்ற செயற்பாடுகள் நிறுவனக் கொள்கையில் இல்லை. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இன்றே இந்த நடைமுறை மாற்றப்படும்” என பதிலளித்துள்ளது. இதுபோன்ற பிரிவினையைக் காட்டுவது உபெருக்கு இது முதன்முறை அல்ல என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் பார்க்க: பீட்சா ஆர்டர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஐடி ஊழியர்..!
First published: December 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்