Home /News /international /

இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை

இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை

உள்நாட்டு தேவை மற்றும் சர்வதேச சூழலை காரணம் காட்டி ஐக்கிய அரபு அமீரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    உலகின் முன்னணி கோதுமை உற்பத்தியாளரான இந்தியா, பல்வேறு நாடுகளுக்கு கோதுமை தானியத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. 2022-23 ஆண்டு காலத்தில் நாட்டின் கோதுமை ஏற்றுமதியை ஒரு கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் விளைச்சல் குறைவு, உள்நாட்டு தேவை ஆகியவற்றை காரணம் காட்டி கோதுமை ஏற்றுமதிக்கு மே 13ஆம் தேதி இந்தியா தடை விதித்தது. ஏற்கனவே, ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய சந்தையில் கோதுமைக்கு தட்டுப்பாடு எழுந்த நிலையில், இந்தியாவும் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிதத்தால், உலக நாடுகள் இந்த முடிவுக்கு வருத்தம் தெரிவித்தன.

    இந்நிலையில், ஏற்கனவே தனி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தகம் செய்து வரும் நாடுகளுக்கு வழக்கம் போல கோதுமை ஏற்றுமதி செய்யப்படும் எனத் தடை உத்தரவில் இந்தியா திருத்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் கோதுமையை இறக்குமதி செய்து பயன்படுத்தும் நாடான ஐக்கிய அரபு அமீரகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, அடுத்த நான்கு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோதுமைகளை ஏற்றுமதி மறு ஏற்றுமதி செய்ய அந்நாடு தடை விதித்துள்ளது.

    சர்வதேச அளவில் கோதுமைக்கு நிலவும் தட்டுப்பாடு மற்றும் உள்நாட்டு தேவை ஆகியவற்றை காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே போடப்பட்டுள்ள சிறப்பு வர்த்தக ஒப்பந்தத்தை மதிக்கும் விதத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராகும் இந்திய வம்சாவளிப் பெண் - யார் இந்த ஆர்த்தி பிரபாகர்?

    இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்து, தனது தேவை போக மீதமுள்ள கோதுமையை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வழக்கத்தை ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கு இதை அந்நாடு மேற்கொள்ளப்போவதில்லை.
    Published by:Kannan V
    First published:

    Tags: UAE, Wheat

    அடுத்த செய்தி