எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் - ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

மே மாதம் முதல் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடை முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.

Tamilarasu J | news18
Updated: May 10, 2019, 2:33 PM IST
எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் - ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அதிபர் ட்ரம்ப்
Tamilarasu J | news18
Updated: May 10, 2019, 2:33 PM IST
அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2018-ம்  ஆண்டு அனுசக்தி ஒப்பந்ததை ஈரான் மீறி வருவதால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்பதாக டொனால்டு டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டார்.

மே மாதம் முதல் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடை முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.


ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதற்கு இந்தியா, சீனா உள்பட எட்டு நாடுகளுக்கு அமெரிக்க தடை விதித்துள்ளது. எனவே இருநாடுகள் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

2015-ம் ஆண்டு கையெழுத்தனான அனுசக்தி ஒப்பந்தத்தின்படி ஈரானை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ, அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை அந்நாடு சந்திக்கும் என பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Loading...

மேலும் பார்க்க:
First published: May 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...