அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த டைர் நிக்கோலஸ், கடந்த 10ம் தேதி இரவு தனது தாயாருக்கு மருந்து வாங்க காரில் சென்றுள்ளார். சிக்னலை கடந்து சென்றதால், இவரது காரை மடக்கிய போலீசார், சரமாரியாக தாக்கினர். இதில் மயக்கம் அடைந்த நிக்கோலஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 10 - ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தின் வீடியோவை தற்போது வெளியாகி பெரும் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் டைர் நிக்கோலஸ் மாம், மாம் என கதறும் காட்சிகள் பார்போரை பதற வைக்கிறது. டைர் நிக்கோலசை தாக்கிய காவலர்கள் 5 பேரும் கறுப்பினத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிக்கோலஸ் மரணத்துக்கு காரணமான காவலர்களுடன், வேடிக்கை பார்த்தவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
கடந்த 2020-ம் ஆண்டுஅமெரிக்காவின் மினிசோட்டா மாகாணம் மினியோபொலிஸ் நகரில், ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர்.
அப்போது, ஒரு போலீஸ்காரர், பிளாய்டை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் அங்கேயே இறந்தார். ஜார்ஜ் பிளாய்டு துடிதுடித்து உயிரிழந்த பரிதாப காட்சி, சமூக வலைதளங்களிலும் ஊடங்களிலும் பரவி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பிளக் லைப்ஸ் மேட்டர் என்ற சொல்லாடலுடன் உலகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது நடவடிக்கைக்கும் உள்ளானார். இந்நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.