டிராமி சூறாவளி: ஜப்பானில் பல மாகாணங்கள் கடும் சேதம்!

news18
Updated: September 30, 2018, 9:42 AM IST
டிராமி சூறாவளி: ஜப்பானில் பல மாகாணங்கள் கடும் சேதம்!
ஜப்பானில் டிராமி சூறாவளி
news18
Updated: September 30, 2018, 9:42 AM IST
ஜப்பானின் தென்பகுதியை கடும் புயலான டிராமி தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் புயல் வலுவடைந்து மற்ற இடங்களுக்கும் நகர்வதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவில் வீசிய    “ டிராமி” புயல் அந்தத் தீவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கடந்த 2 தினங்களாக, டிராமி புயல் கடுமையாக தாக்கி வருகிறது. அதிலும் ஜப்பானின் மேற்குப் பகுதி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த டிராமி சூறாவளி புயல் தென்பகுதியில் உள்ள ரையுக்யூ தீவை கபளீரகம் செய்துவிட்டு ஜப்பானின் உட்புறப்பகுதிகளை நோக்கி மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அது மேலும் வலுவடைந்து, அதிதீவிர புயலாக மாறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஒகினாவா தீவில் வீசிய  “ டிராமி” புயலால் மரங்கள் ஒடிந்து விழுந்தன


இதனால் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்,  உணவு கிடைக்காமல் பசியால் வாடி வருகின்றனர். மேலும் ஞாயிறன்று காலை, ஜப்பானின் உட்பகுதிதியை டிராமி புயல் தாக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
First published: September 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...