ஹோம் /நியூஸ் /உலகம் /

நடுவானில் மோதி சிதறிய விமானங்கள்.. சோகத்தில் முடிந்த சாகசம் - ஷாக் வீடியோ!

நடுவானில் மோதி சிதறிய விமானங்கள்.. சோகத்தில் முடிந்த சாகசம் - ஷாக் வீடியோ!

நடு வானில் போர் விமானங்கள் மோதி விபத்து

நடு வானில் போர் விமானங்கள் மோதி விபத்து

இந்த விமான விபத்தில் 6க்ககும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaTexasTexasTexas

  விமானப் படை சாகசத்தின் போது இரு போர் விமானங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி வெடித்து சிதறிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் டெல்லாஸ் நகரில் விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இதில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள் பங்கேற்றன. நிகழ்வில் பெரிய ரக போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் ஒரு சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா என்ற விமானமும் விண்ணில் பறக்க விடப்பட்டன.

  விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஒன்றோடு ஒன்று தவறுதலாக மோதிக்கொண்டது. இதைத் தொடர்ந்து இரண்டு விமானங்களும் கீழே விழுந்து நொறுங்கி வெடித்து சிதறியது. அங்கு பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டு விமானங்கள் எரிந்து சாம்பலாகின. சாகச நிகழ்ச்சியை பார்க்கவந்தவர்கள் இந்த விபத்துக் காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். அவசர கால மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரு விமானங்களிலும் 6 பேர் பயணித்திருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இதையும் படிங்க: மன்னரை நோக்கி பறந்து வந்த முட்டை.. பதறிப்போன பாதுகாவலர்கள்.. பிரிட்டனில் பரபரப்பு

  கோர விபத்து காரணமாக அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து அங்கிருந்தவர்களின் செல்போனில் வீடியோவாக பதிவான நிலையில், இரு விமானங்களும் மோதிக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

  இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக கூறிய டெல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன், உள்ளூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மீட்பு பணிகளில் துரிதமாக செயல்படுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக FAA அமைப்பு விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Accident, Plane, Plane crash, Viral Videos