பாகிஸ்தானில் சூஃபி மசூதி அருகே குண்டு வெடிப்பு - 3 போலீசார் உள்பட 9 பேர் உயிரிழப்பு

குண்டு வெடிப்பு தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

news18
Updated: May 8, 2019, 12:10 PM IST
பாகிஸ்தானில் சூஃபி மசூதி அருகே குண்டு வெடிப்பு - 3 போலீசார் உள்பட 9 பேர் உயிரிழப்பு
குண்டுவெடித்த இடம்
news18
Updated: May 8, 2019, 12:10 PM IST
பாகிஸ்தானின் லாகூர் நகரில் சூஃபி மசூதி அருகே இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 3 போலீசார் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூர் நகரின் டாடா டர்பார் பகுதியில் உள்ள சூஃபி மசூதியில் இன்று காலை வழக்கமான தொழுகை நடைபெற்றது. மசூதிக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது திடீரென போலீசார் வாகனத்தின் அருகே குண்டு வெடித்தது.


இந்த தாக்குதலில் 3 போலீசார் உள்ளிட்ட 9 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குண்டு வெடிப்பு தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: May 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...