கடையில் கைவரிசையை காட்டிய பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் - அம்பலப்படுத்திய தென்கொரிய அரசு!

பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஊழியர்கள் திருடி சென்ற இரு பொருட்களை பற்றிய தகவல்களையும் தென்கொரிய போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

  • Share this:
கிழக்காசிய நாடான தென் கொரியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த 2 தூதரக ஊழியர்கள் கடை ஒன்றில் இருந்து சில பொருட்களை திருடியதாக தென் கொரிய போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஒரு கடையில் இருந்து பொருட்களை திருடிய போது 2 பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் பிடிபட்டதாகவும் அந்நாட்டு காவல் அதிகாரிகள் கூறி உள்ளனர். தென் கொரியாவின் யோங்சன் (Yongsan) மாவட்டத்தில் உள்ள இட்டாவோனில் (Itaewon) உள்ள கடை ஒன்றுக்கு சென்ற குறிப்பிட்ட பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த 2 ஊழியர்களும் முறையே 11,000 வோன் (10 அமெரிக்க டாலர்) மற்றும் 1,900 வோன் (1.70 அமெரிக்க டாலர்) மதிப்புள்ள 2 பொருட்களை திருடி சென்றதாக யோங்சன் காவல் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஊழியர்கள் திருடி சென்ற இரு பொருட்களை பற்றிய தகவல்களையும் தென்கொரிய போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன்படி சாக்லேட்கள் மற்றும் ஒரு தொப்பியை ஒன்றரை மாத இடைவெளியில் இருவரும் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தகவல் தெரிவித்துள்ள போலீஸ் அதிகாரிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி 1,900 வோன் (1.70 அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சாக்லேட் ட்ரீட்ஸ்களையும் (chocolate treats) தொடர்ந்து பிப்ரவரி 23 அன்று 11,000 மதிப்புள்ள (10 அமெரிக்க டாலர்) மதிப்புள்ள தொப்பி ஒன்றையும் திருடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். கடையில் இருந்து தொப்பி திருடப்பட்ட பின், கடை ஊழியர் ஒருவர் தொப்பி இல்லாததை கண்டு உடனடியாக சிறிது நேரத்திலேயே போலீஸாரை அழைத்து புகார் தெரிவித்தார்.

ALSO READ : டிக்கெட் எடுக்காததால் நகரும் பேருந்தில் இருந்து குதித்த நபர் - உக்ரைனில் அதிர்ச்சி சம்பவம்!

இந்த புகாரை தொடர்ந்து அந்நாட்டு சட்ட அமலாக்க அதிகாரிகள் தொப்பி திருடியதாக கருதப்பட்ட சந்தேக நபர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டனர். இறுதியில் அந்த சந்தேக நபர்கள் பாகிஸ்தான் தூதரகத்தின் ஊழியர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்ததாக கொரியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஒருவர் 35 வயதுடையவர் என்றும் அந்த செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விசாரணையை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக நல்லுறவை பேணும் விதமாக தென் கொரிய அதிகாரிகள் இந்த திருட்டு சம்பவத்தில் சந்தேக நபர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் புகாரை முடித்து வைத்தனர். ராஜாங்க உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டின் கீழ், தூதர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தாங்கள் பணியில் இருக்கும் நாட்டின் சில சட்டங்களின் கீழ் கைது, தடுப்புக்காவல் அல்லது குற்றச்சாட்டை தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ : ஹூலா ஹூப்பிங்கில் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்த அமெரிக்கர் -வைரலாகும் வீடியோ

பாகிஸ்தான் தூதர்கள் இதுபோன்ற புகார்களில் குற்றம் சாட்டப்பட்டு தங்கள் நாட்டை சங்கடத்திற்குள்ளாக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த 2018-ம் ஆண்டில், பாகிஸ்தான் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குவைத் தூதரின் பணப்பையை திருடிய சம்பவம் சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது.

பாகிஸ்தானிய தூதர்கள் மீதான மோசமான பிம்பம் காரணமாக, மே 2018 முதல் மே 2019 வரை ஒப்புதல் இல்லாமல் வாஷிங்டன் டி.சி.யைச் சுற்றி 25 மைல் சுற்றளவில் தாண்டி அவர்களின் இயக்கத்தை தடைசெய்ய அமெரிக்க அரசு பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
Published by:Sankaravadivoo G
First published: