Covid-19 தடுப்பூசியை போட 2 மாதங்கள் வரை கர்ப்பத்தை தாமதப்படுத்த வேண்டுமா? இந்திய சுகாதார நிபுணர்கள் சொல்வது என்ன?

Covid-19 தடுப்பூசியை போட 2 மாதங்கள் வரை கர்ப்பத்தை தாமதப்படுத்த வேண்டுமா? இந்திய சுகாதார நிபுணர்கள் சொல்வது என்ன?

கொரோனா தடுப்பூசி

கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை ஒருவர் போட்டுக்கொண்டால் முதல் இரண்டு மாதங்கள் வரை கர்ப்பமடைவதை திட்டமிடுவதை தாமதப்படுத்துமாறு இந்தியாவில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் கருவுறுதல் நிபுணர்கள் (gynaecologists and fertility experts in India) வலியுறுத்தியுள்ளனர். 

  • Share this:
உலக நாடுகளை ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து அச்சறுத்தி வரும் கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வாக கூறப்படுகிறது. இதனால் பல நாடுகளும் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள்  பல்வேறு பகுதிகளிலும் போடப்பட்டு வரும் நிலையில், கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியை ஒருவர் போட்டுக்கொண்டால் முதல் இரண்டு மாதங்கள் வரை கர்ப்பமடைவதை திட்டமிடுவதை தாமதப்படுத்துமாறு இந்தியாவில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் கருவுறுதல் நிபுணர்கள் (gynaecologists and fertility experts in India) வலியுறுத்தியுள்ளனர். 

கர்ப்ப காலத்தில் தடுப்பூசி பயன்படுத்துவதை எதிர்த்து உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த ஒரு நாளுக்குப் பிறகு (அதிக ஆபத்து உள்ளவர்கள் அல்லது கடுமையான பாதிப்பு உள்ளவர்களை தவிர) இந்த செய்தி இப்போது வெளியாகியுள்ளது. எது எப்படியிருந்தாலும், தடுப்பூசிக்கு முன்னர் கர்ப்ப பரிசோதனையை பரிந்துரைக்கவோ, தடுப்பூசியை போட்டுக்கொண்ட பின்னர் கர்ப்பத்தை தாமதப்படுத்தவோ தாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று WHO கூறியது. இருப்பினும், பாலூட்டும் பெண்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக WHO குறிப்பிட்டுள்ளது. இதனை ஒருவர் போட்டுக்கொள்வதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறுகிறது. 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவர், சுமன் சிங் (Dr Suman Singh) பேசும்போது, ``நான் தடுப்பூசி போட வேண்டாம் என்று பரிந்துரைக்கவில்லை, மாறாக தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிறகு குறைந்தது இரண்டு மாதங்களாவது தம்பதியினர் ஒரு குழந்தைக்கு திட்டமிடுவதை தாமதப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். The European Society of Human Reproduction and Embryology (ESHRE)) பாதுகாப்பான உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (Assisted Reproductive Technology (ART)) நடைமுறைகளுக்கான முந்தைய வழிகாட்டலை மீண்டும் உறுதிப்படுத்தியது.

“கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாமா, வேண்டாமா என்பது போன்ற முடிவை ஒரு சுகாதார நிபுணருடன் நெருக்கமான ஆலோசனையை பெற்றுக்கொள்ளவேண்டும். மேலும் ART இன் விளைவுகளை கண்காணிக்கவும், தடுப்பூசி போடப்படாத நோயாளிகளுக்கு எதிராக ஒப்பிடவும் ESHRE பரிந்துரைக்கிறது.” என்று டாக்டர் சிங் மேலும் கூறினார். இதற்கிடையில், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் இதுவரை எந்த கோவிட் தடுப்பூசி மருத்துவ பரிசோதனையிலும் பங்கேற்கவில்லை என்பதையும்,  இந்த நேரத்தில் தடுப்பூசி பெறக்கூடாது என்ற கருத்தையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கர்ப்பத்திற்கான கோவிட் தடுப்பூசியில் நீண்டகால பாதுகாப்பு தரவுகள் எதுவும் இல்லை என்பதனால் தடுப்பூசி போட்ட எட்டு வாரங்கள் வரை கர்ப்பத்தைத் தவிர்ப்பது பாதுகாப்பானது என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர், ஏனெனில் சில தடுப்பூசிகள் கருவுக்கு தீங்கு விளைவித்து பார்வை மற்றும் கேட்கும் திறனை பாதிக்கும். கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் (Covishield and Covaxin) இரண்டும் செயலற்ற தடுப்பூசிகள் (inactive vaccines) (அவை இறந்த வைரஸைப் பயன்படுத்துகின்றன) என்றாலும், மகப்பேறு நிபுணர்கள் (pregnant experts) இந்த தடுப்பூசிகளை பரிந்துரைத்தால் அதை மறுக்காமல் போட்டுக்கொள்வதுதான் சிறந்தது என்கிறார்கள்.
Published by:Ram Sankar
First published: