பசியால் 20 லட்சம் மக்கள் பலியாகப் போகிறார்கள்: சோமாலியாவில் தலைவிரித்தாடும் வறட்சி

பொருளாதார உதவிகள் கிடைக்கத் தாமதமானால் கூட மக்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் ஐநா அச்சம் தெரிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: June 7, 2019, 10:26 AM IST
பசியால் 20 லட்சம் மக்கள் பலியாகப் போகிறார்கள்: சோமாலியாவில் தலைவிரித்தாடும் வறட்சி
(Image : Reuters).
Web Desk | news18
Updated: June 7, 2019, 10:26 AM IST
வெயில் காலம் முடிவதற்குள் சோமாலியாவில் 20 லட்சம் மக்கள் பசியால் பலியாகப் போகிறார்கள் என ஐநா தெரிவித்துள்ளது.

ஆப்ரிக்க நாடுகளுள் ஒன்றான சோமாலியாவில், வெயிலின் தாக்கத்தால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வெயில் காலம் முடியும் முன்னர் பசியால் 20 லட்சம் மக்கள் பலியாகும் சூழல் உள்ளதாக ஐநா அவசர கால மீட்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கால்நடைகளும் பயிர்களும் கூட அழிந்து வரும் சூழலில், மீட்புப் பணிக்கே சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்கிறார் ஐநா துணைச் செயலாளர் மார்க் லோலாக். உணவு மற்றும் தண்ணீருக்காக மட்டும் சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா பகுதிகளுக்கு ஐநா சுமார் 45 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

பொருளாதார உதவிகள் கிடைக்கத் தாமதமானால் கூட மக்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் ஐநா அச்சம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: அமெரிக்கா பயணமா? எச்சரிக்கை தேவை!- குடிமக்களுக்கு சீனா அட்வைஸ்!
First published: June 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...