பாகிஸ்தானில் இந்து பெண்களை கடத்தி மதம் மாற்றம்?

இந்த விவகாரம் தொடர்பாக, உரிய விளக்கமளிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

news18
Updated: March 24, 2019, 11:09 AM IST
பாகிஸ்தானில் இந்து பெண்களை கடத்தி மதம் மாற்றம்?
மாதிரி படம்.
news18
Updated: March 24, 2019, 11:09 AM IST
ஹோலி தினத்தன்று, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளை கடத்தி, இஸ்லாம் மதத்துக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கோட்கி மாவட்டத்தைச் சேர்ந்த 13வயது சிறுமி ரவீணா மற்றும் 15-வது சிறுமி ரீனாவை ஹோலி பண்டிகையின் போது, கடத்திய இஸ்லாமிய கும்பல், அவர்களை திருமணம் செய்து மதமாற்றம் செய்துள்ளனர் என பெண்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, உரிய விளக்கமளிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் இந்து சேவா அமைப்புத் தலைவர் சஞ்ஜேஷ் தான்ஜா, இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அந்தப் பெண்கள் தங்களை யாரும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றவில்லை. சுய விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டோம் எனக் கூறும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

Also See..

First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...