ஹோம் /நியூஸ் /உலகம் /

ரஷ்ய ராணுவ பயிற்சி மையத்தில் பயங்கரவாத தாக்குதல்.. 11 வீரர்கள் மரணம்!

ரஷ்ய ராணுவ பயிற்சி மையத்தில் பயங்கரவாத தாக்குதல்.. 11 வீரர்கள் மரணம்!

ரஷ்ய ராணுவ பயிற்சி மையத்தில் பயங்கரவாத தாக்குதல்

ரஷ்ய ராணுவ பயிற்சி மையத்தில் பயங்கரவாத தாக்குதல்

ரஷ்ய வீரர்கள் ராணுவ பயிற்சி பெறும் மையத்திற்குள் புகுந்து இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaMoscowMoscow

  ரஷ்யா - உக்ரைன் போர் பரபரப்பான சூழலை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய நாட்டின் ராணுவ பயிற்சி தளத்தில் பயங்கவராத தாக்குதல் நடந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  உக்ரைனில் போர் புரிவதற்காக ரஷ்ய வீரர்கள் அந்நாட்டின் பெல்கோரோட் பிராந்தியத்தில் பயிற்சி செய்து வந்த நிலையில், இரு பயங்கரவாதிகள் இந்த பயிற்சி மையத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், 15 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்ய தெரிவித்துள்ளது.

  துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் மீது ரஷ்ய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை CIS(Commonwealth of Independent States) என்று சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிதாக 3 லட்சம் வீரர்கள் கட்டாய ராணுவ பணியில் சேர வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக இவர்களுக்கு தீவிர பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.  இந்த பயிற்சி மையத்தில் ரஷ்ய ராணுவத்தினரை குறிவைத்து தாக்கி, அதில் 11 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் ரஷ்ய தரப்பை மேலும் ஆத்திரப்படுத்தியுள்ளது. போரில் இதுவரை ரஷ்ய தரப்பில் சுமார் 65,000 வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

  இதையும் படிங்க: வறுமையின் பிடியில் 1 கோடி பேர்..3 ஆண்டுகளில் கதி கலங்கி நிற்கும் இலங்கை!

  இருப்பினும் ரஷ்யா விடாபிடியாக போரை தொடர்ந்து வருகிறது. நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் அரசு துரிதமான ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில், உக்ரைனுக்கு நேட்டோவில் உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது தற்கொலைக்கு சமம் என ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் நேட்டோவில் இணைவது 3ஆம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ஆனால், புதினின் மிரட்டல்களுக்கு கவலைப்படாமல் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் பொருளாதார, ஆயுத உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

  Published by:Kannan V
  First published:

  Tags: NATO Force, Russia - Ukraine, Terror Attack, Vladimir Putin