பதவியேற்பு விழாவில் குண்டுவெடிப்பு: அசராத அதிபர் அஷ்ரப் கனி !

குண்டுவெடிப்பில் அதிபர் உள்பட யாருக்கும் பாதிப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு விழாவில் குண்டுவெடிப்பு: அசராத அதிபர் அஷ்ரப் கனி !
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி
  • Share this:
ஆப்கானிஸ்தான் அதிபராக அஷ்ரப் கனி பதவி ஏற்கும் விழாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்தாண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி நடந்த ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலின் முடிவுகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. இதில் அதிபர் அஷ்ரப் கனி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், காபூலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அதிபராக அஷ்ரப் கனி பதவிப்பிரமாணம் ஏற்கும்போது மேடை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

காரில் தற்கொலை படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு என அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் பதவியேற்பு விழாவில் கூடியிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் மேடைக்கு வந்த அதிபர் அஷ்ரப் கனி, மக்களை பார்த்து அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.


குண்டுவெடிப்பில் அதிபர் உள்பட யாருக்கும் பாதிப்பில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே, அமெரிக்கா-தாலிபன் ஒப்பந்தத்தின்படி அந்நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

Also see...
First published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading