லடாக்கை சீன பகுதியாக காட்டிய விவகாரம்.. மன்னிப்பு கோரியது ட்விட்டர்..

கோப்புப் படம்

லடாக்கை சீனாவின் பகுதியாக குறிப்பிட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

 • Share this:
  நேரலை வீடியோவில் லடாக்கை சீனாவின் ஒரு பகுதியான ஜம்மு-காஷ்மீர் என ஒளிபரப்பிய விவகாரத்தில், ட்விட்டர் அளித்துள்ள விளக்கம் போதுமானதாக இல்லை என்று நாடாளுமன்ற கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

  தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம் குறித்து சமூக வலைதள நிறுவனங்கள் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் ஜம்மு-காஷ்மீரை சீனாவின் ஒரு பகுதியென ட்விட்டர் தவறாக ஜியோடேக் செய்திருந்தது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தொழில்நுட்பக் கோளாறால் இது நிகழ்ந்தது என்று ட்விட்டர் விளக்கமளித்தது. இதனை ஏற்க முடியாது என்று பாஜக எம்பி மீனாட்சிலேக்கி தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க...ட்ரம்புக்கு எதிராக அமெரிக்காவில் உருவான உயிருள்ள சிலைகள்( வீடியோ)  ட்விட்டர் செய்துள்ள இந்த தவறு இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் என்றும் அவர் கூறியுள்ளார். , சீனா வரைபடத்திலும் இதேபோன்ற தவறு செய்வீர்களா? என நாடாளுமன்ற கூட்டுக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: