ஹோம் /நியூஸ் /உலகம் /

எலான் மஸ்க் பற்றி எழுதிய பத்திரிகையாளர்கள் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

எலான் மஸ்க் பற்றி எழுதிய பத்திரிகையாளர்கள் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

நாள் முழுவதும் என்னை விமர்சிப்பது முற்றிலும் நல்லது, ஆனால் எனது நிகழ்நேர இருப்பிடத்தை கண்காணிப்பதும்  எனது குடும்பத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதும் ஏற்க தகுந்தது அல்ல - எலான் மஸ்க்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், வியாழக்கிழமை அன்று நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், சிஎன்என், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மற்றும் பிற வெளியீடுகளில் பணிபுரியும் நிருபர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்கினார்.

கணக்குகளை நீக்கியது மற்றும் அவர்களின் சுயவிவரங்கள் மற்றும் கடந்த ட்வீட்களை ஏன் மறையச் செய்தது என்பதை நிறுவனம் பத்திரிகையாளர்களுக்கு விளக்கவில்லை. ஆனால் மஸ்க் வியாழன் இரவு ட்விட்டரில், தனிப்பட்ட விபரங்கள் குறித்த புதிய விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பத்திரிகையாளர்கள் ட்விட்டர் கணக்கு முடக்கங்களுக்கு முதலில்,  தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தின் விபரங்களையும் இடத்தையும்  கண்காணிக்கும் ஒரு நிருபரின் கணக்கை முடக்கினார். அதன் பிறகு தன்னை பற்றி இதுவரை எழுதிய பத்திரிகையாளர்களது கணக்குகளை முடக்கினார்.

இதையும் படிங்க : ராஜஸ்தானில் விற்கப்பட்ட பாகிஸ்தானின் மாட்டிறைச்சி சாக்லெட்.?! 

டைம்ஸ் நிருபர் Ryan Mac (@rmac18), போஸ்ட் நிருபர் ட்ரூ ஹார்வெல் (@drewharwell), CNN நிருபர் டோனி ஓ'சுல்லிவன் (@donie), மற்றும் Mashable நிருபர் Matt Binder @MattBinder ஆகியோரின் கணக்குகள் இடைநீக்கம் செய்யப்பட்டன. அமெரிக்க கொள்கை மற்றும் அரசியலை உள்ளடக்கிய சுதந்திர ஊடகவியலாளர் ஆரோன் ரூபாரின் (@atrupar) கணக்கும் இடைநிறுத்தப்பட்டது.

நாள் முழுவதும் என்னை விமர்சிப்பது முற்றிலும் நல்லது, ஆனால் எனது நிகழ்நேர இருப்பிடத்தை கண்காணிப்பதும்  எனது குடும்பத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவதும் ஏற்க தகுந்தது அல்ல. ட்விட்டர்  நிறுவனத்தின் "Doxxing" விதிகளின் கீழ் தான் பத்திரிக்கையாளர்களது கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவித்தார்.

"Doxxing" என்பது ஒருவரின் அடையாளம், முகவரி அல்லது பிற தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் வெளியிடுவதைக் குறிக்கிறது. அதன்பின்னர், ட்விட்டர் தனது அனுமதியின்றி மற்றொரு நபரின் தற்போதைய இருப்பிடத்தைப் பகிர்வதைத் தடைசெய்யும் வகையில் அனைத்து பயனர்களுக்கும் அதன் விதிகளை மாற்றியது.

First published:

Tags: Elon Musk, Twitter