ஹோம் /நியூஸ் /உலகம் /

எலான் மஸ்க் பெயரில் வதந்திகள் பரப்பிய ப்ளூ டிக் நபர்கள்... அதிரடி நடவடிக்கை எடுத்த ட்விட்டர்

எலான் மஸ்க் பெயரில் வதந்திகள் பரப்பிய ப்ளூ டிக் நபர்கள்... அதிரடி நடவடிக்கை எடுத்த ட்விட்டர்

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

டிவிட்டரில் எலான் மாஸ்க் என்று பெயர் மாற்றி நகைச்சுவைக்காக வதந்திகள் பரப்பிய கணக்குகள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, IndiaSan FranciscoSan FranciscoSan Francisco

  ட்விட்டரில் ப்ளூ டிக் கணக்கு வைத்து இருக்கும் நபர்கள் தங்கள் கணக்கை எலான் மஸ்க் போல் பெயர் மாற்றிக் கொண்டு பல விதமான கருத்துக்களைப் பதிவிட்டு வந்துள்ளனர். அப்படிச் செய்த நபர்களில் கணக்குக்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கியுள்ளார்.

  கருத்துக்களைத் தெரிவிக்கும் முக்கிய சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு மாதம் 8 டாலர் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

  அதற்கு அவருக்குப் பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தது. ட்விட்டரில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார். இந்த நிலையில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளை வைத்துள்ள நபர்கள், திடீரென்று அவர்களின் கணக்குகளின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை எலான் மாஸ்க் என்ற பெயரில் மாற்றிக் கொண்டு அவரை போலப் பேசுவது போல் பல வதந்திகளைப் பரப்பி உள்ளனர்.

  முதலில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ட்விட்டர் பின்னர் கணக்குகளை முடக்கிவிட்டது. இதில் பிரபலங்களும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க நகைச்சுவை நடிகை காத்தி கிரிஃபின், அவரின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கில் எலான் மஸ்க் என்று பெயரை மாற்றினார். அதனைத் தொடர்ந்து அவரின் கணக்கு முடக்கப்பட்டது.

  மேலும் h3h3production என்ற பிரபல யூட்யூப் சானல் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் இது போன்று செயலில் ஈடுபட்டதால் எலான் அவரின் டிவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  அங்கீகரிக்கப்பட்ட கணக்குகள் "parody" என்ற வார்த்தை குறிப்பிடாமல் பெயரை மாற்றி அடுத்தவர் போல் டிவிட்டரில் பேசினால் அவர்களில் கணக்குகள் கண்டிப்பாக முடக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  Also Read : ரஷ்யாவின் கடும் தாக்குதலால் உக்ரைன் மக்களுக்கு நேர்ந்த அடுத்த சோகம்

  முதலில் நாங்கள் எச்சரிக்கை கொடுத்தோம். தற்போது அங்கீகரிக்கப்பட்ட கணக்கு விகிதத்தை அதிகப்படுத்தும் நிலையில் உள்ளதால் இனி எச்சரிக்கை கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

  கணக்குகளில் பெயர்களை மாற்றினால் கண்டிப்பாகத் தற்காலிகமாகக் கணக்கு முடக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பெரிய அளவில் டிவிட்டரில் கணக்குகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது செய்தித் துறை ஜனநாயகத்தை ஊக்குவிப்பதாகவும் மக்களின் குரல்களை வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Elon Musk, Twitter