ஹோம் /நியூஸ் /உலகம் /

புதிய ஹேர் ஸ்டைல் உடன் ட்ரம்ப்... கேலி செய்யும் ட்விட்டர்வாசிகள்..!

புதிய ஹேர் ஸ்டைல் உடன் ட்ரம்ப்... கேலி செய்யும் ட்விட்டர்வாசிகள்..!

Image credits: Twitter/Associated Press.

Image credits: Twitter/Associated Press.

மேலும் சிலர் ‘இந்தப் புதிய தோற்றத்துக்கு பழைய தோற்றமே எவ்வளவோ மேல்’ என கேலி செய்தும் வருகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அமெரிக்க அதிபரின் புதிய ஹேர் ஸ்டைல் தான் இன்றைய ட்விட்டர் வாசிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய ‘தலைப்பு’.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது பிரிட்டன் சுற்றுப்பயணத்துக்குத் தயாரானார். பிரிட்டன் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகளைக் கவனிக்கத் தயாரான உலகம் ட்ரம்ப்-ன் ஹேர் ஸ்டைலால் ஒரு நிமிடம் குழம்பிவிட்டது.

புதிதாக தலைமுடியை பின்பக்கமாக வாரிய ஸ்டைல் உடன் தனது பிரிட்டன் பயணத்துக்குக் கிளம்பி உள்ளார் ட்ரம்ப்.

இது ட்ரம்ப் தானா என்ற ஃபேக்ட் செக் நிறைவடைந்த பிறகு நெட்டிசன்களால் ட்ரம்ப்-ன் புதிய அவதாரத்தை விமர்சிக்காமல் இருக்கமுடியவில்லை.

நெட்டிசன்கள் பலரும் ட்ரம்ப் ‘விக்’ வைத்திருக்கிறார் என்றும் காலநிலை மாற்றம் போல இது என்ன புதிய மாற்றம்? என்றும் விமர்சித்து வருகின்றனர். மேலும் சிலர் ‘இந்தப் புதிய தோற்றத்துக்கு பழைய தோற்றமே எவ்வளவோ மேல்’ என கேலி செய்தும் வருகின்றனர்.

மேலும் பார்க்க: ஒபாமாவைத் தொடர்ந்து சினிமா துறையில் கால் பதிக்கும் ஹிலாரி!

Published by:Rahini M
First published:

Tags: Donald Trump