ஹோம் /நியூஸ் /உலகம் /

நாளை மாலைக்குள் முடியும் டீல்.. ட்விட்டரை சொந்தமாக்கும் எலான் மஸ்க்!

நாளை மாலைக்குள் முடியும் டீல்.. ட்விட்டரை சொந்தமாக்கும் எலான் மஸ்க்!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

நெட்டிசன்கள் நெடுநாளாக எதிப்பார்த்த தருணம் விரைவில் வரப்போகிறது என்பதை எலான் மஸ்க் அவரின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, IndiaSan FranciscoSan Francisco

  ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமைக்கும் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ட்விட்டர் அலுவலகத்திற்குள் கை கழுவும் தொட்டியுடன் நுழைந்த தனது வீடியோவையும் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

  உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து மூன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் மேற்கொண்டார்.

  ஆனால், ட்விட்டரில் உள்ள போலிக் கணக்குகள் குறித்த விவரங்களைத் தராததால் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என திடீரென அறிவித்தார். இதையடுத்து எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவின் டெலாவேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 28-க்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கெடு விதித்தது. இதன்படி, வெள்ளிக்கிழமை மாலைக்குள் ட்விட்டர் உடன்படிக்கையை எலான் மஸ்க் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறப்பட்டது.

  இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க், அவரது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டரின் தலைவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  Also Read : 'ஆபாசப் படத்தில் சாத்தான் இருக்கு.. டெலிட் பண்ணுங்க'.. டிஜிட்டல் உலகம் குறித்து பேசிய போப் பிரான்சிஸ்!

  சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமையகத்திற்கு கை கழுவப் பயன்படுத்தும் தொட்டியுடன் சென்ற வீடியோவையும் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

  இதன்மூலம் ட்விட்டர் நிறுவனம் அவர் வசம் வரவுள்ளது உறுதியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் சென்றவுடன் 75 சதவிகித ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை என்று ட்விட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க்கே விளக்கம் அளித்துள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Elon Musk, Twitter