ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம்... வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம்... வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட டிரம்ப் உத்தரவு
அதிபர் டிரம்ப்
  • Share this:
கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை மோசடி வழக்கில் சந்தேகித்து போலீஸார் கைது செய்தனர்.

கைதுக்கு ஒத்துழைக்காத அவரை காவலர் ஒருவர் கழுத்தில் மிதித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில், போலீஸ் பிடியிலிருந்தபோது ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார் . இதையடுத்து நீதி கேட்டு மினியாபோலிஸ் நகரில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.


போராட்டத்தின் போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை அனுப்பியுள்ள அதிபர் டிரம்ப், வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுடவும் உத்தரவிட்டுள்ளார்.

Also read... உலகம் முழுவதும் 60 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - ஒன்பதாவது இடத்தில் இந்தியா
Also see...
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading