ஹோம் /நியூஸ் /உலகம் /

12 மணி நேர வேலை… லீவ் இல்லை… எலான் மஸ்க் வருகைக்குப் பின் கதறும் ட்விட்டர் ஊழியர்கள்?

12 மணி நேர வேலை… லீவ் இல்லை… எலான் மஸ்க் வருகைக்குப் பின் கதறும் ட்விட்டர் ஊழியர்கள்?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ட்விட்டரில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், மஸ்க் தங்களையும் பணிநீக்கம் செய்வார் என்பதால், தாங்களே முன்வந்து பணியில் இருந்து விலகுவதாக பலர் பணியில் இருந்து விலகி வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, IndiaCaliforniaCalifornia

  சமூக வலைத்தளங்களின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ட்விட்டர் நிறுவனத்தை உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் டாலர் செலவில் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியதில் இருந்தே ட்விட்டர் தளம் முதல் அதில் பணியாற்றும் ஊழியர்கள் வரை பல மாற்றங்கள் நடந்து வருகின்றன.

  அந்த வகையில், ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உட்பட தலைமை நிதியியல் அதிகாரி நெட் செகா, சட்டக் கொள்கை மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஜயா காடே, பொது ஆலோசகர் சீன் எட்ஜெட், தலைமை வாடிக்கையாளர் அதிகாரி சாரா பெர்சோனெட் போன்ற ட்விட்டரின் உயர்மட்ட நிர்வாகிகள் எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

  எல்லையில் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் நிறுத்திவைப்பு : உலகப்போராக உருமாறுகிறதா உக்ரைன்- ரஷ்யா போர்?

  பணி நீக்கங்களுக்கு முன்பே வெளியேறும் உயர் அதிகாரிகள்:

  ஊழியர்கள் தனது உத்தரவுகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, பணியாளர்களை 50 சதவிகிதம் குறைக்கும் முடிவில் எலான் மஸ்க் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முதல் கட்ட பணி நீக்கங்களில் சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் நீக்கப்படலாம் என்ற தகவலும் பரவியது. ட்விட்டரில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், மஸ்க் தங்களையும் பணிநீக்கம் செய்வார் என்பதால், தாங்களே முன்வந்து பணியில் இருந்து விலகுவதாக பலர் தங்கள் பணியில் இருந்து விலகி வருகின்றனர்.

  ட்விட்டர் நிறுவன கோர் டெக்னாலஜிஸ் பிரிவின் பொது மேலாளர் நிக் கால்டுவெல் தனது ட்விட்டர் கணக்கு மூலமாகவே தன் பணியை ராஜினாமா செய்வதை உறுதிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நிக் கால்டுவெல் அவரது ட்விட்டர் பயோவில் முன்னாள் ட்விட்டர் நிர்வாகி என்று மாற்றியது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் தங்கள் ராஜினாமாவை அறிவித்தனர்.

  பணி நேரம் அதிகரிப்பு? 

  எலான் மஸ்க் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பணியை முடிப்பதற்காக ட்விட்டரில் பணிபுரியும் பொறியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், காம்ப் ஆஃப் (Comp offs) அல்லது கூடுதல் மணிநேரங்கள் பணிபுரிவதற்கு ஊதியம் பெறுவது பற்றி கூட பேச முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. பல ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு அச்சப்பட்டு அவர்கள் இவை எல்லாவற்றுக்கும் ஒப்புக்கொண்டு பணி செய்வதாக தெரிகிறது.

  Published by:Archana R
  First published:

  Tags: Elon Musk, Twitter