ஹோம் /நியூஸ் /உலகம் /

மூடப்படுகிறதா ட்விட்டர்? அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் ஊழியர்கள்... எலான் மஸ்க் பதிவால் சர்ச்சை

மூடப்படுகிறதா ட்விட்டர்? அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் ஊழியர்கள்... எலான் மஸ்க் பதிவால் சர்ச்சை

எலான்

எலான்

கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டும் இல்லையென்றால் வேலையை விட்டு போகலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • interna, Indiaamericaamerica

  எலான் மஸ்க் தரும் அழுத்தம் காரணமாக ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இதையடுத்து ட்விட்டர் அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வருவதை தடுக்கும் விதமாக தற்காலிகமாக அலுவலகம் மூடப்பட்டுள்ளன.

  பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அந்நிறுவன ஊழியர்கள் எண்ணிலடங்கா இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அதிரடியாக வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது சொற்ப அளவிலேயே ஊழியர்கள் இருப்பதாகவும் அவர்களும் கூடுதல் நேரம் வேலை செய்யும்படும் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

  தற்போது, கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டும் இல்லையென்றால் வேலையை விட்டு போகலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்நிறுவன ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் தங்களது பணியை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில், திங்கட்கிழமை வரை ட்விட்டர் ஊழியர்களுக்கு அலுவலகம் வருவதற்கான ஆக்சஸ் மறுக்கப்பட்டுள்ளது.

  இது ஒருபுறமிருக்க, எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று இந்த பிரச்சனையை மேலும் சர்ச்சைக்குரியதாக மாற்றியுள்ளது. கல்லறையில் ட்விட்டர் இருப்பது போன்ற புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ள நிலையில், பலரும் RIP Twitter என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ட்விட்டர் நிறுவனம் மூடப்படுகிறதா என்ற சர்ச்சையும் வலுபெற்றுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Elon Musk, Twitter