முகப்பு /செய்தி /உலகம் / ட்விட்டரில் தொடரும் பணிநீக்கம் : மேலும் 200 பேரை வேலையில் இருந்து தூக்கிய எலான் மஸ்க்!

ட்விட்டரில் தொடரும் பணிநீக்கம் : மேலும் 200 பேரை வேலையில் இருந்து தூக்கிய எலான் மஸ்க்!

ட்விட்டர் நிறுவனம்

ட்விட்டர் நிறுவனம்

Twitter Layoffs : சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் மேலும் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaSan FranciscoSan Francisco

முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உலகின் முக்கிய பணக்காரரும், தொழிலதிபர்களுள் ஒருவரான எலான் மஸ்க் வாங்கிய முதல் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வந்தார். ஆயிரக்கணக்கில் ஊழியர்களை இதுவரை பணிநீக்கம் செய்துள்ள நிலையில் மீண்டும் 200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது சுமார் 10 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ஆட்குறைப்பினால், தற்போது ட்விட்டரின் வெறும் 2,000 ஊழியர்கள்தான் பணியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

ட்விட்டரின் செலவுகளைக் குறைப்பதில் முனைப்போடு செயல்பட்டு வரும் எலான் மஸ்க் தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறார். ட்விட்டரை வாங்கிய சில நாட்களிலேயே ஆயிரக்கணக்கில் ஊழியர்களை இமெயில் மூலம் பணிநீக்கம் செய்தார். அதே போல், முக்கிய பதவிகளில் பணியாற்றிய அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிராக் அகர்வால் (CEO), தலைமை நிதி அதிகாரி (CFO) நெட் செகல், தலைமை சட்ட அதிகாரி(CLO) விஜாய கட்டே உள்ளிட்டோரை நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளார்.

ட்விட்டர் ஊழியர்களுக்குள் உபயோகப்படுத்தும் சலாக் என்ற செயலி உபயோகத்தில் இல்லை என்றும், ஊழியர்கள் இடையே தகவல் தொடர்புகளைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தில் தகவல்கள் பார்க்க இயலாதவாறு செய்துள்ளதாகவும், நிறுவனத்தின் இமெயில் கணக்குகளில் இருந்து ஆட்களை நீக்கியுள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read : போதைப்பொருளால் ஜாம்பிகளாகும் மனிதர்கள்? சாட்சிகளாக நிற்கும் அமெரிக்க வீதிகள் - அதிரவைக்கும் தகவல்கள்

இனி ட்விட்டரில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படாது என்று ஊழியர்களுடன் கலந்துரையாடலில் கூறிய எலான் மஸ்க், தற்போது மேலும் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஊழியர்கள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Elon Musk, Twitter