ஹோம் /நியூஸ் /உலகம் /

நீங்க ஆபீஸ் வர்றீங்களா ? முதல்ல வேலையில இருக்கீங்களான்னு பாருங்க - ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்விட்டர்

நீங்க ஆபீஸ் வர்றீங்களா ? முதல்ல வேலையில இருக்கீங்களான்னு பாருங்க - ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்விட்டர்

பணிநீக்கம் நடவடிக்கையை தொடங்கிய ட்விட்டர் நிறுவனம்

பணிநீக்கம் நடவடிக்கையை தொடங்கிய ட்விட்டர் நிறுவனம்

ட்விட்டர் நிறுவனம் தனது மாபெரும் ஆட்குறைப்பு நடவடிக்கையை இன்று தொடங்கியுள்ளதாக ஊழியர்களுக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaSan FranciscoSan Francisco

  முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை இன்று தொடங்கியுள்ளது.

  ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.  அதில், "ட்விட்டர் நிறுவனத்தை ஆரோக்கியமான பாதையில் வழிநடத்த, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை இன்று தொடங்கியுள்ளோம். எனவே, ஊழியர்களுக்கு இமெயில் மூலம் தகவல்களை அனுப்பியுள்ளோம். அதில் நீங்கள் பணியில் தொடர்கிறீர்களா இல்லையா என்ற விவரம் தெரியவரும்.

  இன்று மாலைக்குள் மெயில் வரவில்லை என்றால் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் நிலைமை என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இந்த மாற்றங்களுக்காக ட்விட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே, அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்கள் வீடு திரும்பவும், அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் ஊழியர்கள் அப்படியே வீட்டிற்கு திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறது."

  இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தில் சுமார் 7,000 ஊழியர்கள் உள்ள நிலையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை வேலையை விட்டு நீக்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

  இதையும் படிங்க: வேலை பறிபோனாலும் கொட்டிய பணமழை.. பராக் அகர்வாலுக்கு ரூ.346 கோடி இழப்பீடு கிடைக்கும் என தகவல்!

  ட்விட்டரை கையகப்படுத்திய முதல் நாளில் இருந்தே எலான் மஸ்க் தனது அதிரடி நடவடிக்கைகளை நாள்தோறும் நிகழ்த்தி வருகிறார். ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் சென்ற உடனே, அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிராக் அகர்வால்(CEO), தலைமை நிதி அதிகாரி (CFO) நெட் செகல், தலைமை சட்ட அதிகாரி(CLO) விஜயா கட்டே உள்ளிட்டோரை நிறுவனத்தை விட்டு எலான் வெளியேற்றினார். அத்துடன் ட்விட்டர் கணக்குகளில் ப்ளூ டிக்குகளைப் பெறுவதற்கு, மாதத்திற்கு 8 டாலர், (இந்திய மதிப்பு ரூ. 661) வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Elon Musk, Job, Twitter