கொரோனா குறித்து தவறான தகவலை பரப்பிய அமெரிக்க எம்.பி. மார்ஜோரி கிரீனின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் ஏராளமான நன்மைகள் இருப்பதைப் போன்றே, தீமைகளும் இதில் அடங்கியுள்ளன. இங்கு பரப்பப்படும் பொய்யான தகவல்கள் மக்கள் மத்தியில் காட்டுத் தீயாக பரவி, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
மிக முக்கியமாக, உலகிலேயே குற்றச் செயல் அதிகம் நடைபெறும் களமாக சமூக வலைதளங்களும், ஆன்லைனும் மாறிவருகிறது. பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதால், தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுதாக கருதும் சமூக வலைதள நிறுவனங்கள், பொய்யான தகவல் குறித்து மிகுந்த கண்காணிப்புடன் செயல்படுகின்றன.
இதையும் படிங்க :வானிலிருந்து கொட்டிய அதிசய ‘மீன் மழை’.. வியந்துபோன மக்கள் - படங்கள்
இந்நிலையில் அமெரிக்க எம்.பி. என்றும் பாராமல் ஒருவரது கணக்கை ட்விட்டர் முடக்கம் செய்துள்ளது.கொரோனா குறித்து தவறான தகவலை பரப்பியதாக குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், செய்தி தொடர்பாளருமான மார்ஜோரி கிரீனின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கொரோனாவால் 3 பேர் பாதிப்பு - 1.2 மில்லியன் மக்கள் வசிக்கும் நகருக்கு முழு ஊரடங்கு போட்ட சீனா!
ஜார்ஜியாவை சேர்ந்த கிரீன், கொரோனா தொடர்புடைய பல்வேறு தகவல்களை ட்விட்டர் மூலமாக மக்கள் மத்தியில் தெரிவித்து வந்தார். இந்நிலையில் அவர் பொய்யான தகவல்களை பரப்பினார் என்ற புகாரின்பேரில் அவரது கணக்கான @mtgreenee என்பதை ட்விட்டர் முடக்கியுள்ளது.
மீண்டும் மீண்டும் கொரோனா தகவல் அளிப்பு தொடர்பான விதிகளை மீறியதால் கிரீனின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து கூறியுள்ள ட்விட்டர் நிறுவனம், தங்களது தகவல் அளிப்பு கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், தவறான தகவல்களை தொடர்ந்து பரப்பினால் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கூட அவர்களது கணக்கின் மீது நடவடிக்கை எடுக்கப்படும என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : தீவிர மதுவிலக்கை அமல்படுத்தும் தாலிபான்கள்.. 3000 லிட்டர் மதுவை ஆற்றில் ஊற்றி அழித்தனர்
இருப்பினும் எந்த ட்வீட்டுக்காக கிரீனின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது என்கிற விபரம் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்னர் கிரீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ட்விட்டர் என்பது அமெரிக்காவின் எதிரியாக செயல்படும் நிறுவனம். அதனால் உண்மை சொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அமெரிக்காவுக்கு ட்விட்டர் தேவையில்லை என்பதை நாங்கள் உலகுக்கு தெரியப்படுத்துவோம். நம்முடைய எதிரிகளை வீழ்த்துவதற்கான நேரம் இப்போது வந்து விட்டது' என்று கூறியுள்ளார்.
ட்விட்டரில் ஒருவர் தவறாக அளிக்கிறார் என்று முதன்முறையாக தெரியவரும்போது அவரது கணக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஆனால் அவர் விதிகளை மீறுகிறார் என்கிற விபரம் மட்டும் அவருக்கு தெரிவிக்கப்படும்.
3 முறை தவறு செய்தால் கணக்கு 12 மணி நேரமும், 5 முறை தவறு செய்தால் நிரந்தரமாகவும் முடக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Twitter