ஒரே நேரத்தில் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, உலகின் முன்னணி பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் உள்ளிட்டோர் ட்விட்டர் கணக்கு ஹேக்செய்யப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்
பில் கேட்ஸ் ஒபாமா
  • Share this:
உலக அளவில் ஹேக் என்பது இணையசெயல்பாட்டுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்துவருகிறது. அரசின் மிக முக்கியமான, தனிப்பட்ட இணையத்தில் கூட ஹேக்கர் ஊடுருவிவிடுகிறார்கள். இந்தநிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரும் உலகப் பிரபலங்கள் பலர் இன்று ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ், எலான் மஸ்க், கேன் வெஸ்ட், கிம் கர்டாஷின் வெஸ்ட், ஜெப் பெசோஸ், மைக் ப்ளூம்பெர்க் ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் நேற்று ஹேக் செய்யப்பட்டன. அவர்களுடைய ட்விட்டர் பக்கங்களில் பிட்காயினுக்கு விளம்பரம் செய்யும் வகையில் ட்விட் செய்யப்பட்டிருந்தது.

 பில்கேட்ஸின் ட்விட்டரில், ‘நான் திரும்பக் கொடுக்கவேண்டும் என்று எல்லோரும் கேட்கின்றனர். இதுதான் அந்த நேரம்’ என்று ஒரு ட்விட் செய்யப்பட்டது.
அதேபோல, ஒபாமா ட்விட்டர் பக்கத்திலும், ‘கொரோனாவின் காரணமாக நான் என்னுடைய சமூகத்துக்கு எல்லாத்தையும் திரும்ப வழங்கப் போகிறேன். என்னுடைய முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள எல்லா பிட்காயின்களையும், நான் இரட்டிப்பாக திரும்ப அனுப்பப் போகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து விளக்கமளித்த ட்விட்டர் நிர்வாகம், ‘ட்விட்டர் கணக்குகளில் ஏற்பட்ட ஹேக் குறித்து தெரிந்தது. இதுகுறித்து நாங்கள் விசாரணை செய்துவருகிறது. அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விரைவில் இதுகுறித்து விளக்கமளிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading