இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டை சகோதரர்களுக்கு இரட்டையர்களாக குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு வேறு தம்பதியினருக்கு பிறந்த குழந்தைகள் எப்படி ஒரே மாதிரி இருக்கிறார்கள் என பலரையும் வியப்படைய செய்துள்ளது.
இரட்டை சகோதரிகளான பிரிட்டனி, ப்ரியான டீன் ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்களான ஜோஷ் மற்றும் ஜெரமி சால்யெர்ஸை 2017 ஆம் நடைபெற்ற இரட்டையர்கள் திருவிழாவில் சந்தித்தனர். 35 வயதான சால்யர்ஸ் சகோதரர்கள் 33 வயதான டீன் சகோதரிகளிடம் ப்ரோப்போஸ் செய்துள்ளனர்.
அமெரிக்கா, விர்ஜினியா மாகாணத்தில் வாழும் இவர்கள் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொண்டனர். கடந்த 2020 ஆண்டு, அந்த சகோதரிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக ஒரே நேரத்தில் பிரசவித்தனர்.
இந்நிலையில் 2021 பிப்ரவரி மாதத்தில் ஜெரமிக்கு குழந்தை பிறந்தது. இதனைதொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் ஜோஷ்க்கு குழந்தை பிறந்தது.
அந்த இரண்டு குழந்தைகளும் இரட்டையர்களாக இருப்பார்களா என எதிர்ப்பாத்திருந்த அந்த தம்பதிகளுக்கு அவர்கள் நினைத்து போலவே நடந்தது. அந்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த அதிசய நிகழ்வை பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்த இரட்டையர்கள் குவேட்டெர்னெரி ட்வின்ஸ் என அழைக்கப்படுகின்றனர். அதாவது இரண்டு இரட்டையர் ஜோடிக்கு பிறக்கும் குழந்தை இரட்டையர்களாக இருந்தால் அவர்கள் குவேட்டெர்னெரி ட்வின்ஸ் என கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.