இரட்டை கோபுர தாக்குதலும்... தீராத சர்ச்சைகளும்...

news18
Updated: September 11, 2018, 12:46 PM IST
இரட்டை கோபுர தாக்குதலும்... தீராத சர்ச்சைகளும்...
news18
Updated: September 11, 2018, 12:46 PM IST
நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதல் செப்டம்பர் 11,  2007ம் ஆண்டில்  அல்கொய்தா தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது.  21-ம் நூற்றாண்டின் மிக மோசமான தாக்குதல் என்ற பல ஊடகங்கள் இச்சம்பவம் குறித்து எழுதின. இந்தத் தீவிரவாத தாக்குதலில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.

2001-ல் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பழிதீர்க்க இந்த சம்பவத்தை நிறைவேற்றியதாக அல்கொய்தா அறிவித்தது. 4 விமானங்களைக் கடத்தி அவற்றில் இரண்டை நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது மோதச் செய்தனர். உலகின் வர்த்தக இடமாக விளங்கிய இந்த 2 கோபுரங்களும் அடுத்தடுத்த விமானத் தாக்குதலால் முற்றிலுமாக நிலைகுலைந்து போயின. 3 மணிநேரத்தில் மொத்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

கோப்புப்படம்.


மூன்றாவது விமானத்தை எர்லிங்டன் என்ற இடத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதச் செய்தனர். இதில் விமானத்தில் இருந்த 59 பேரும், பென்டகனில் இருந்த 125 ராணுவ வீரர்களும் பலியாகினர். 4-வது விமானத்தை கடத்திய தீவிரவாதிகளுக்கும் அதிலிருந்து பயணிகளுக்கும் சண்டை நடந்து முடிவில் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது.

உலக வர்த்தக மைய கட்டிடத்தில் பணியாற்றியவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உடல்கள் முழுமையாக எரிந்த நிலையில், சாம்பலும் சில எலும்புகள் மட்டுமே கிடைத்தன. அவற்றைக் கொண்டு உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வந்தது. 17 ஆண்டுகள் ஆன பின்பும் அந்தப் பணி இன்னும் முழுமையடையவில்லை.இந்நிலையில் ட்வின் டவர் இடிப்பு அமெரிக்க அரசாங்கத்தால் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என்கிற கருத்தும் நிலவி வருகிறது. பல்லாயிரம் பேர் வேலை பார்க்கும் ட்வின் டவரில் அன்று மட்டும் மிகக் குறைவான மக்களை வேலை பார்த்துள்ளனர். அதில் வேலை பார்த்தவர்கள் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக சவுதி அரேபியர்கள் பலர் அதில் இருந்தனர்.
Loading...
அமெரிக்க பேராசிரியர் ஸ்டீவ் ஜோன் என்பவர் 19 நபர்களால் மட்டுமே இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய முடியாது என்கிறார். இரட்டை கோபுரம் இடிந்து விழும் முறையைப் பார்த்து வெடிகுண்டு உபயோகப்படுத்தி தகர்க்கப்பட்டது போல் உள்ளது என்று கூறியிருந்தார். இரட்டை கோபுரத்தின் இரும்பு தூணை எரிக்க விமானத்தில் பயன்படுத்தப்படும் ஜெட் பெட்ரோலினால் முடியாது என்றும், மொத்த கட்டிடம் இடிந்து விழ வேண்டும் என்றால் அதற்கு விமானம் மோதும் சம்பவம் மட்டுமே காரணமாக இருக்காது என்று கூறியுள்ளார்.விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி 3000 டிகிரி செண்டிகிரேட் வெப்பத்திலும் எதுவும் ஆகாது. அப்படியிருக்க 1000 டிகிரி செண்டி கிரேட்டில் கருப்பு பெட்டி அழிந்து விட்டது என அமெரிக்க கூறுவது நம்ப முடியாத ஒன்று என்று கூறுகின்றனர்.

அமெரிக்கா எண்ணெய் வளத்தையே தன் முதல் காதலியாக கருதும். ஆப்கானிஸ்தானின் எண்ணெய் வளத்தை சுரண்டுவதற்காக போர்க்கான காரணத்தை தானே உருவாக்கியது என்றும் கூறப்படுகிறது.ஒட்டு மொத்த இடிப்பும் அமெரிக்காவின் உள்வேலை என்பதற்கு மேலும் பல சான்றுகளை அறிவியல் ரீதியாக பலர் முன்வைத்தாலும் அதற்கு எந்த வகையிலும் அமெரிக்க அரசாங்கம் பதிலளிக்கவில்லை. உள்வேலை என்று கருத்திற்கான எதிர் கருத்தைக் கூட தற்போது வரை அமெரிக்க அரசு பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது போர் தொடுக்கப்பட்ட போது அப்போது அமெரிக்க அதிபர் புஷ் கூறிய வார்த்தை இதுதான், "இது சாத்தான்களுக்கு எதிரான யுத்தம்". ஆனால் உலக மக்களுக்கு நன்றாக தெரியும் 'சாத்தான்' யார் என்று!
First published: September 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...