முகப்பு /செய்தி /உலகம் / உலகில் இப்படி கூட இரட்டையர்கள் இருக்க முடியுமா? கின்னஸ் சாதனை படைத்த சகோதரிகள்..

உலகில் இப்படி கூட இரட்டையர்கள் இருக்க முடியுமா? கின்னஸ் சாதனை படைத்த சகோதரிகள்..

இரட்டை சகோதரிகள்

இரட்டை சகோதரிகள்

உயர அளவில் பயங்கரமான வித்தியாசத்தில் இருக்கும் ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை சகோதரிகள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaJapanJapan

ஜப்பானைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் வித்தியாசமான உயர அளவை கொண்டுள்ளதால் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளனர். யோச்சி மற்றும் மிச்சி கிகுச்சி என்ற இரட்டை சகோதரிகள் ஜப்பான் நாட்டில் ஒகாயாமா என்ற பகுதியில் வசித்து வருகின்றனர்.

இருவருக்கும் தற்போது 33 வயது ஆகிறது. யோச்சி என்றவர் 162.5 செ.மீ (5.4 அடி) உயரமும், மிச்சி என்றவர் 87.5 செ.மீ (2.10 அடி) உயரமும் கொண்டுள்ளனர். ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை சகோதரிகள் முக அமைப்பு மற்றும் உயரத்தில் ஒற்றுமை இல்லாமல் இருப்பது இதுவே முதல் முறை என்பதால் அதீத உயர வித்தியாசத்தில் இருக்கும் இரட்டை சகோதரிகள் என்று கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பெற்றுள்ளனர்.

கின்னஸ் உலக சாதனை அவர்களின் வீடியோவை வெளியிட்டு இதனைப் பதிவு செய்துள்ளனர். அதில் இரட்டை சகோதரிகள் 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 15 நாள் பிறந்துள்ளவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த உயரத்தில் இருக்கும் மிச்சிக்கு congenital spinal epiphyseal dysplasia என்று அழைக்கப்படும் எலும்பு நோய் இருப்பதால் அவரின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது.

மிச்சி அவர்களின் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். தொடர்ந்து அவரின் தந்தை நடத்தும் கோவிலில் வேலை செய்து வருகிறார். யோச்சிக்கு திருமணமாகி தாயாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Guinness, Japan, Twins