பிரிட்டனின் குட்டி இளவரசர் ஜார்ஜ் பாலே நடனம் பழகுவதை கேலி செய்த குட் மார்னிங் அமெரிக்கா என்ற யூட்யூப் சேனலின் ஆங்கருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அதனையடுத்து, அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
குட் மார்னிங் அமெரிக்கா என்ற யூட்யூப் சேனலில் உலக நடப்புகள் குறித்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அந்த நிகழ்ச்சியை லாரா ஸ்பென்சர் என்ற நெறியாளர் தொகுத்து வழங்கினார். அப்போது, பிரிட்டனின் 6 வயதான குட்டி இளவரசர் ஜார்ஜ் குறித்த விவரங்களைத் தெரிவித்தார்.

லாரா
அப்போது, ஜார்ஜின் படிப்புகள் குறித்து லாரா ஸ்பென்சர் விளக்கினார். பாலே வகை நடனத்தின் மீது ஜார்ஜுக்கு காதல் உள்ளது என்று அவரின் தந்தை இளவரசர் வில்லியம்ஸ் கூறியிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் அதுகுறித்து பேசிய லாரா, ‘வில்லியம்ஸ் குறிப்பிட்டதைக் கூறி கேலி செய்யும் விதத்தில் சிரித்தார். அவருடைய செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை எழுப்பியது. லாராவுக்கு நெட்டீசன்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அதனையடுத்து, தற்போது லாரா மன்னிப்புக் கோரியுள்ளார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.