ஆப்கானிஸ்தானில் செய்தியாளர் ஒருவரின் பின்னால் தாலிபான்கள் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அமெரிக்க படைகள் அந்நாட்டை விட்டு முழுமையாக வெளியே நாளையே கடையே நாளாகும். இதனால் காபூல் விமான நிலையம் அருகேபதற்றமான சூழல் நிலவுகிறது. முடிந்தவரை மக்களை மீட்கும் பணியில் உலக நாடுகள் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கடந்த ஞாயறன்று மட்டும் 1200 நபர்களை அமெரிக்கா மீட்டுள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறியப் பின்னர் புதிய ஆட்சியை தாலிபான்கள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.காதாரம், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை நிர்வகிக்கும் அதிகாரிகள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: சீனாவுடன் நட்புக்கு பாகிஸ்தானுக்கு உதவப்போகும் கழுதைகள்!
முதல் அதிரடியாக, பல்கலைக்கழகங்களில் இருபாலரும் ஒன்றாக படிக்க தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். இஸ்லாமிய சட்டப்படி மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு தனித்தனி வகுப்பறைகளில் பாடம் நடத்தப்படும் என, கல்வித்துறையை கவனித்து வரும் சியார் கான் யாத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புகழ் பெற்ற நாட்டுப்புற பாடகரைக் கொன்ற ஆப்கான் தாலிபான்கள்
இதேபோல், கந்தஹாரில், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ள தாலிபான்கள், பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்திருக்கின்றனர். அடுத்து என்னென்ன அதிரடிகளை தாலிபான்கள் அரங்கேற்றவுள்ளனர் என்ற அச்சத்தில் அந்நாட்டு மக்கள் உள்ளனர்.
இந்நிலையில், தொலைக்காட்சி நேரிலை நிகழ்ச்சியின்போது தொகுப்பாளரின் அருகில் தாலிபான் அமைப்பினர் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஈரானிய செய்தியாளரான மாசிஹ் அலினேஜாட் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். மேலும், “ இது விநோதமானது. தொலைக்காட்சி தொகுப்பாளரின் பின்னால் துப்பாக்கியுடன் தாலிபான்கள் காட்சியளிப்பதுடன் இஸ்லாமிக் எமிரெட் (ஆப்கானிஸ்தான்) குறித்து பொதுமக்கள் கவலைகொள்ள வேண்டாம் என சொல்ல கூறுகின்றனர். கோடிக்கணக்கான மக்களின் மனதில் அச்சம் உள்ளதற்கு தாலிபான்களே காரணம். இது மற்றொறு ஆதாரம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.