• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • "என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் சவுதி இளவரசர்”- கொதிக்கும் துருக்கி அதிபர்

"என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் சவுதி இளவரசர்”- கொதிக்கும் துருக்கி அதிபர்

பத்திரிகையாளர் கஷோகி (Photo: AP)

பத்திரிகையாளர் கஷோகி (Photo: AP)

பத்திரிகையாளர் கஷோகி கொலை செய்யப்பட்டது குறித்து சவுதி இளவரசர் கூறுவது அர்த்தமற்றதாக உள்ளதென துருக்கி அதிபர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பத்திரிகையாளர் கஷோகி கொலை செய்யப்பட்டதற்கு தகுந்த நியாயத்தை உலக நாடுகள்தான் கேட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார் துருக்கி நாட்டு அதிபர் எர்டோகன்.

கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து சவுதி இளவரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்த பத்திரிகையாளர் கஷோகி சவுதி இளவரசரால் தான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரேபியாவுக்கான செய்தியாளராக இருந்தவர் ஜமால் கஷோகி. இவர் தனது திருமணம் தொடர்பாக துருக்கியில் சவுதி அரேபிய தூதரகத்துக்குச் சம்பவ நாள் அன்று சென்றுள்ளார். வாயிலில் துருக்கியைச் சேர்ந்த வருங்கால மனைவியை காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்ற கஷோகி அதன் பின்னர் திரும்பவில்லை.

அவர் சவுதி இளவரசரின் ஆட்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் என துருக்கி அரசு குற்றம் சுமத்துகிறது. இதுவரையில் இக்குற்றச்சாட்டு தொடர்பாக மாறுபட்ட பதில்களை மட்டுமே சவுதி இளவரசர் தெரிவித்து வருகிறார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த குற்றவாளிகளை நாடு கடத்தவும் இளவரசர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

தொடர்ந்து துருக்கி நாடு ஆடியோ, வீடியோ ஆதரங்கள் என வரிசையாக வெளியிட்டு வருகிறது. பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் மரணத்துக்கு நியாயம் கேட்கும் துருக்கி அதிபர் எர்டோகன், “ஜமால் கஷோகி தூதரகத்தை விட்டு வெளியேறிவிட்டதாக சவுதி இளவரசர் கூறுகிறார். கஷோகி என்ன குழந்தையா? வாயிலில் காதலியை நிறுத்திவிட்டு தொலைந்து போக? இந்த உலகத்தையே முட்டாளாக நினைக்கிறார்கள். பதில் சொல்ல வேண்டியவர்களை எப்படி பிடிக்க வேண்டுமென இந்த நாட்டுக்குத் தெரியும்” என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: தி.மு.க.வில் செந்தில் பாலாஜி... அதிகம் பதறுவது அ.தி.மு.க-வா? அ.ம.மு.க-வா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: