கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அன்று துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாக கொண்டு நிகழ்ந்த கோர நிலநடுக்கம் இரு நாடுகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. ரிக்டர் அளவுகோளில் 7.8ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது.
துருக்கியில் 43,500 மேற்பட்டோர் மற்றும் சிரியாவில் 6,000க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 50,000க்கும் மேற்பட்டோர் இந்த கோர நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். பேரிடரில் சிக்கித் தவிக்கும் துருக்கிக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மீட்பு குழுக்களை அனுப்பி உதவிகளை செய்தன. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் புணரமைப்பு பணிகளை துருக்கி அரசு மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பின் காரணமாக சுமார் 5.2 லட்சம் குடியிருப்புகளை கொண்ட 1.6 லட்சம் கட்டங்கள் சேதமடைந்து பாதிப்புகளை கண்டுள்ளது.
துருக்கி அரசு அளித்த தகவலின் படி, சுமார் 8.65 லட்சம் பேர் கூடாரங்களிலும், 23,500 பேர் கண்டெய்னர் வீடுகளிலும், 3.76 லட்சம் பேர் டார்மெட்டரி அல்லது பொது வசிப்பிடங்களிலும் தற்போது அடைக்கலம் புகுந்துள்ளனர். எனவே, சுமார் 15 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிப்பதாக துருக்கி அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவர்களுக்கு குடியிருப்புகளை கட்டித் தரும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது.
இந்த கட்டங்களை ஓராண்டு கால அளவில் விரைந்து கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளை, பாதுகாப்பு தரங்களை உறுதிப்படுத்தி இந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள அரசுக்கு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் கட்டுமானத்தில் ஊழல் நிகழ்ந்தாக தீவிரமான புகார் எழுந்தன.
அடுக்குமாடி கட்டுமானங்கள் பல மோசமான தரத்தில் கட்டப்படுகின்றன. நிலநடுக்கம் அதிர்வுகளை தாங்கும் திறன் இந்த கட்டடங்களுக்கு இல்லை என நிபுணர்கள் புகார் கொடுத்த நிலையில், 100க்கும் மேற்பட்ட ஒப்பந்ததார்கள் மீது கைது வாரண்ட் பிறப்பித்து அரசு நடவடிக்கை எடுத்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Earthquake, Home, Turkey Earthquake