முகப்பு /செய்தி /உலகம் / துருக்கி நிலநடுக்கத்தை சாதகமாக்கிய திருடர்கள்.. கடைகளில் புகுந்து செல்போன், சார்ஜர் திருடிய கும்பல் கைது..!

துருக்கி நிலநடுக்கத்தை சாதகமாக்கிய திருடர்கள்.. கடைகளில் புகுந்து செல்போன், சார்ஜர் திருடிய கும்பல் கைது..!

துருக்கி நிலநடுக்கம்

துருக்கி நிலநடுக்கம்

துருக்கி நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டதாக 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inte, IndiaTurkey

துருக்கி மற்றும் சிரிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 28,000 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலட்யா பகுதியில் நிலநடுக்கத்தால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் கடை வீதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் சமூக விரோத கும்பல்கள், நிலநடுக்கத்தால் சேதமடைந்த கடைகளுக்குள் புகுந்து, கையில் கிடைத்த பொருட்களை அள்ளிச்செல்கின்றனர். செல்போன், ஹெட்போன்ஸ், சார்ஜர் என ஆளுக்கு இரண்டு பாக்ஸ்களை கையில் எடுத்துக்கொண்டு கடைக்கு கடை தங்களது சூறையாடலை தொடர்ந்து வருகின்றனர்.

கடைகள் மட்டுமின்றி வங்கிகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கடை வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் துருக்கி ராணுவத்தினர் துப்பாக்கிகளுடன் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Turkey Earthquake