நேற்று (06.02.2023) அதிகாலை 4 மணி அளவில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியிலும், சிரியாவிலும் 140க்கும் அதிகமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிந்து விழுந்து நொறுங்கியுள்ளது. துருக்கியைத் தொடர்ந்து, சிரியா, லெபனானிலும் நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 90 விநாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 4000 மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை நீண்டித்துகொண்டே செல்கிறது.
முதலில் 7.8 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கம் தொடர்ந்து 7.6 ரிக்டர் அளவில் இரண்டாம் முறையும் மற்றும் மூன்றாம் முறையும் இரு நாடுகளையும் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் காயமடைந்த உள்ளனர். பலர் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இடிப்பாடுகளுக்கு நடுவில் சிக்கியவர்களை மீட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று (07.02.2023) மீண்டும் நிலநடுக்கம் தாக்கி உள்ளது. இந்த தொடர் நிலநடுக்கத்தை மூன்று நாட்களுக்கு முன்பே ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டறிந்து கூறியதாக சோஷியல் மீடியாவில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
Sooner or later there will be a ~M 7.5 #earthquake in this region (South-Central Turkey, Jordan, Syria, Lebanon). #deprem pic.twitter.com/6CcSnjJmCV
— Frank Hoogerbeets (@hogrbe) February 3, 2023
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் (Frank Hoogerbeets) என்ற டாச் ஆராய்ச்சியாளர், அவரது டிவிட்டர் கணக்கில் மூன்று நாட்களுக்கு முன்பே துருக்கி மற்றும் சிரியா எல்லையில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். அவர் SSGEOS எனப்படும் சூரியக் குடும்ப புவியியல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
பிப்ரவரி 3 ஆம் நாள் அவர் டிவிட்டரில் பதிவிட்ட பதிவில், துருக்கி, ஜார்டன், சிரியா மற்றும் லெபனான் பகுதி தென் மத்திய பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் விரைவில் அல்லது சிறிய காலத்தில் ஏற்படும் என்று குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, மற்றொரு பதிவில் மேலும் ஒரு நிலநடுக்கம் 9.6 ரிக்டர் அளவில் தாக்கக்கூடும் என்று நேரம் மற்றும் நாள் குறிப்பிட்டுப் பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவுகள் தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
இந்த அளவு துல்லியமாக நிலநடுக்கத்தைக் கணிப்பது என்பது இயலாத காரியம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நிலநடுக்க ஏற்படும் என்று கூட கணிக்க முடியும் ஆனால் அவர் குறிப்பிட்ட ரிக்டர் அளவும் இடமும் சரியாக அமைந்தால் டிவிட்டரில் நெட்டிசன்கள் வியப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், இதனை முன்பே அறிந்து செயல்பட்டிருந்தால் 4000 மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்க வேண்டி இருக்கமா என்ற கேள்வியும் சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Earthquake, Syria, Turkey, Turkey Earthquake