முகப்பு /செய்தி /உலகம் / கோர நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 24,000 தாண்டியது.. மீட்பு களத்தில் இந்திய குழு தீவிரம்

கோர நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 24,000 தாண்டியது.. மீட்பு களத்தில் இந்திய குழு தீவிரம்

துருக்கியில் கோர நிலநடுக்கம்

துருக்கியில் கோர நிலநடுக்கம்

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaIstanbul Istanbul

துருக்கி மற்றும் சிரியாவில் நாடுகளுக்கு இடையே மையமாக கொண்டு பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இரு நாடுகளையும் நிலைகுலைய வைத்துள்ளது. இந்த கொடூர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24218 ஆக உயர்ந்துள்ளது. 82987 பேர் காயமடைந்துள்ளனர். 2 கோடியே 40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6,589 கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு, இந்திய மருத்துவக் குழுவினர், இரவு பகல் பாராது சிகிச்சை அளித்து வருகின்றனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து 6 விமானங்களில் மீட்புக்குழுவினர் மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில், 99 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவினர், இஸ்கென்டிரன் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அண்டக்யா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் பலவும் நிரம்பி வழிவதால், இடிபாடுகளில் இருந்து மீட்கப்படுவோர் இந்திய மருத்துவக் குழுவை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக எக்ஸ் ரே எடுக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. தேவையான மருந்துகளும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. இரவு பகல் பாராது மருத்துவ சேவையாற்றி வரும் இந்தியக் குழுவினரை, இந்திய துணைத்தூதர் வீரேந்திர பால், நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

First published:

Tags: Syria, Turkey, Turkey Earthquake